பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

எட்டு நாட்கள்


எனவே, எட்டு நாட்களை வீணாக்குகிறார்கள்! எட்டு நாட்கள், ப்ரூனோவை, அவருடைய கொள்கையை எடுத்துரைக்கவும், வாதிடவும் பயன்படுத்தச் சொல்லியிருந்தால், வாய்ப்பு என்று கூறி, ஏற்றுக்கொண்டிருப்பார். இப்போதோ சாகத்துணிந்த அவரைச் சாகடிக்க எட்டு நாட்கள் கழியவேண்டி இருக்கிறது!

தான் உரைக்கும் கொள்கையை மறுத்திட, வாதிட யார் முன்வந்தாலும், ப்ரூனோ மகிழ்ச்சியுடன் வரவேற்பவர். அந்த வாதிடும் திறமை பாராட்டுதலை மட்டுமல்ல பகையைப் பெற்றுத்தந்தது. எனினும், பகை வளருகிறது. ஆபத்து ஏற்படுகிறது என்பதற்காகக் கொள்கையை விட்டுக்கொடுப்பவரல்ல ப்ரூனோ, நாம் கொண்டுள்ள கொள்கையை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு மக்கள் அறிவாளிகள் உட்பட, பக்குவம் பெறவில்லை. இந்நிலையில் நாம் ஏன், வீணாகப் பாடுபடவேண்டும்-- எதைப் பேசினால் மக்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ அதைக் கூறிப் புகழ்பெறலாம், அல்லது எந்த அளவுக்குக் கூறினால். மக்கள் உள்ளம் அன்று இருந்த நிலையில் தாங்கிக்கொள்ள முடியுமோ அந்த அளவுக்குக் கூறிக்கொண்டிருப்போம், என்று திருப்தி கொள்பவரும் அல்ல. மிகமிகத் தெளிவானது—அப்பழுக்கற்ற ஆதாரமுள்ளது நான் கொண்டுள்ள கொள்கை--இதனை மறுப்போரோ, மணலில் கோட்டை கட்டிவைத்துக் கொண்டிருப்பவர்கள். அவர்களுடைய கொள்கைகளில் தெய்வீகம் இருப்பதாகக் கூறுகிறார்கள். தெளிவு இல்லை, காட்டவும் இயலவில்லை: அருள்வாக்கு என்கிறார்கள், அக்ரமத்தைக் கூசாமல் புரிகிறார்கள், பற்று அறுபடச்செய்யும் பாசுரம் பாடுகிறார்கள், பாபச்செயலை அஞ்சாது செய்கிறார்கள்; இவர்களுக்கு அஞ்சி, நான் என் அசைக்கொணாத கொள்கையைக் குடத்திலிட்ட விளக்-