பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. என். அண்ணாதுரை

25


மடைமை ஆகுமா? என்று கேட்டார், மார்டின் லூதர்--கால்வின், ஜிவிங்லி. போன்றோரும் இதையே கூறினர் -- மக்கள் முதலில் மருண்டனர். பிறகு "ஆமாம், இந்த மடைமை ஆகாது. நமக்கு மோட்ச வழி காட்டியாக நாம் ஒரு தூய்மையாளரைத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று கூறினர்; லூதர் வென்றார்.

"பாவத்துக்குப் பரிகாரம், மனதால் கழுவாய் தேடுவது தானே--காணிக்கை கொடுத்தால் பாவம் மறையுமோ! மறையும் என்று வாணிபம் செய்கிறார் மத அதிபர்! ஏற்றுக் கொள்கிறீர்களே, ஆராய்ந்து பாராமல். காணிக்கை கொடுத்துப் பாவத்தைக் கழுவிக்கொள்ள முடியுமானால், பணக்காரன், கொலை, கொள்ளை, எனும் எந்தப்பாவமும் புரியலாம், தப்பித்துக்கொள்ளலாம். அல்லவா? .இதுவா அறம்? இதுவா மார்க்கம்? இதுவா கர்த்தரின் கட்டளை? இதுவா சுவிசேஷம்?" என்று கேட்டனர், பிராடெஸ்ட்டென்ட் இயக்கத்தினர்--மக்கள், தெளிவு பெற்றனர் -- துணிந்து போப்பாண்டவரின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டனர்.

இந்த அளவுக்குத்தான் மக்கள் தயாராயினர்.

கயமையைக் கண்டிக்கவும் தூய்மையைப் போற்றவும் முன்வந்தனர்.

மத அதிபர்கள், மாசுமருவற்றவர்களாக இருத்தல் வேண்டும்--ஒழுக்க சீலர்களாக விளங்க வேண்டும் என்று கோரத் தலைப்பட்டனர்.

ப்ருனோ, மத அதிபர்கள், எப்படி இருக்கவேண்டும், கயமை நிரம்பியவர்கள் கூடாதல்லவா, தூய்மை உள்ளவர்கள்தானே தொழுகை நடாத்தும் தகுதியுடையார், என்ற