பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/3

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எட்டு நாட்கள்

எட்டு நாட்கள்! மரணத்துக்கும் அவனுக்கும் இடையே எட்டே நாட்கள் உள்ளன. தண்டனை தந்தாகிவிட்டது. அவனைச் சுட்டெரிக்க, மாற்ற முடியாத தண்டனை--வேறு வழக்காடி நீதி கேட்கும் இடமும் கிடையாது--இன்று 1600-ம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் ஒன்பதாம் நாள்--எட்டு நாட்கள் உள்ளன. தண்டனை நிறைவேற்றப்பட! அவன் விரும்பினால். உயிரைக் காப்பாற்றிக்கொள்ளலாம். "ஐயனே! அடிபணிகிறேன். அஞ்ஞானத்தால் நான் உளறி வந்தேன் இது நாள்வரையில். மெய்ஞ்ஞான போதகரே! என் பிழை பொறுத்திடுக! என் பிழை பொறுத்திடுக!" என்று சொன்னால் போதும், தண்டனை இல்லை. சாவு இல்லை, வாழலாம். சிறப்புறக்கூட வாழலாம்! வரவேற்புகளும் பதவிகளும் வழங்கப்படும்! திருவிழாக் கோலத்துடன் உலவலாம்! பட்டத்தரசர்கள் கட்டித் தழுவிக்கொள்வர்--பாத காணிக்கை பெறும் குருமார்கள் அன்புமுத்தம் அளிப்பர்--மாளிகைகள் விருந்தளிக்கும்,

எட்டே நாட்கள் உள்ளன அவன் ஒரு முடிவுக்கு வர.

வாழ்வா? சாவா? என்ற முடிவு--அவனே இரண்டிலொன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

அவன் கொல்லப்படவேண்டியவன்தான் என்று, ஆச்சாரியாரும் கூறிவிட்டார், அரச மன்றமும் தீர்ப்-