பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

நல்ல தீர்ப்பு

எட்டு நாட்கள்


அதுபோதும். ஐயன் பெருமைகளைப் படி என்று கூறி வந்தார், இளம் உள்ளம் கோபர்னிகசின்பால் லயித்துவிட்டது. பன்முறை கண்டித்திருக்கிறார் ஆன்ஸ்லம்.

"உலகம் உருண்டை என்கிறாயே, மகனே! அப்படியானால், நரகம் எங்கே இருக்கிறது? புனித ஏடு படித்திருக்கிறாயே, கூறு, நரகம், உன் உருண்டை உலகிலே எங்கேயடா இருக்கும்" என்று கேட்பார் ஆன்ஸ்லம், ப்ரூனோ சிரித்துக்கொண்டே, "எங்கே இருக்கும்? நீங்களல்லவா கூறவேண்டும்" என்று மடக்குவான். அவர் காதைப் பொத்திக்கொள்வார் ! அவரும் அவர் போன்றாரும், விண்ணகத்திலே. ஒளிவிடும் சிம்மாசனத்தில் ஐயன் வீற்றிருக்கிறார். அங்கு விசாரணை நடைபெறும் என்ற எண்ணம் கொண்டவர்கள். ப்ரூனோவின் கவலை விசாரணை எப்படி இருக்கும் எப்போது நடைபெறும் என்பதுகூட அல்ல, சுற்றாத சூரியனைச் சுற்றுவதாகவும், சுற்றும் பூமியைப் பாய்போல கிடப்பதாகவும். ஆராய்ச்சிக்கு ஒவ்வாத முறையிலே நம்புகிறார்களே, இது ஏன் என்பதாகும். இதிலிருந்து துவங்கிய அறிவு விசாரணை, ப்ரூனோவை நெடுத்தூரத்துக்கு அழைத்துச்சென்றது.

மனிதன் பாவத்தோடு பிறக்கிறான்--அவனைப் பாவம் புரியும்படி தீயதேவன் சதா தூண்டுகிறான்--அவனுடைய தூண்டுதலிலிருந்து மீளவும், கர்த்தரின் கிருபையைப் பெறவும் தொழுகை நடத்தவேண்டும்--முறை நாங்கள் கூறுகிறோம்---இடம் நாங்கள் காட்டுகிறோம்---நேரம் நாங்கள் குறிக்கிறோம்---காணிக்கை எமக்குத் தாருங்கள் என்றனர் மத அதிபர்கள்--கேட்கும் முறை, பெறும் காணிக்கை, வகுத்திருக்கும் சடங்கு இவைகள் பற்றி, லூதரும் பிறரும் ஆராய்ந்தனர்--ப்ரூனோ, இவைபற்றி அல்ல, மனிதன், ஈடேற,