பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. என். அண்ணாதுரை

31


தூய்மைபெற, அவனாலேயே முடியும், தக்கபடி முயன்றால், என்பது பற்றி ஆராய்ந்தார்.

கோளங்கள் பற்றியும், ஒழுக்கமுறை பற்றியும், ப்ரூனோ தீட்டிய மூன்று அரிய ஏடுகள், பழைய கோட் பாட்டைத் தகர்த்தெறிவனவாக அமைந்தன. கலத்தில் இருப்போன்தான் அலையையும் சுழலையும் சமாளித்துக் கலத்தைச் செலுத்தவேண்டுமே தவிர, இக்கரையிலோ அக்கரையிலோ இருந்துகொண்டு ஒருவன் கலத்தைச் செலுத்துவான் என்று எங்ஙனம் கூறமுடியும்--மனிதனும் அதுபோன்றே, தன் சிந்தனையையும் செயலையும் அவனேதான் செலுத்திச் செல்லவேண்டும். அதற்காக வேறு ஒருவரை நியமித்துக்கொள்வது பொருளற்றது, எனவே பயனற்றது என்று ப்ரூனோ வாதிட்டார்.

தூய்மையான சிந்தனை, செம்மையான செயலைச் செய்யும் முயற்சி- இவை மனிதனை ஈடேறச் செய்யும் என்று ரூனோ கூறினார்.

மதவாதிகள், மனிதனுக்குப் 'போலீஸ்' வேலை செய்தனர்--ப்ரூனோ 'தோழமை' பேசினார். மனிதன் இயல்பால் கெட்டவனுமல்ல, பாபியுமல்ல, அவனிடம் தெய்வீகம் இருக்கத்தான் செய்கிறது; அதனை அறிந்து இன்புற்று, தக்கன தகாதன என்ற பாகுபாடு பெற்று, பாடு அறிந்து ஒழுகுதல் வேண்டும்--மனிதன், கயமை, தூய்மை, எனும் இரு கடல்களுக்கிடையே தவிக்கும் கலம். நாங்கள் மீகான்கள் என்று கூறும் மதவாதிகள் போலின்றி, ப்ரூனோ மனிதன் மேம்பாடடைய முடியும், சுய முயற்சியால் என்று நம்பினார். இதனை எப்படி தொழுகை ஸ்தலங்-