பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

எட்டு நாட்கள்


யார் செய்த சூழ்ச்சியோ, இதுநாள் வரை ரோம் நகர மத அதிபர் பிடியில் சிக்காது இருந்துவந்த ப்ரூனோவை, ஆபத்தில் கொண்டுவந்து சேர்த்தது.

ப்ரூனோவுக்கு எப்போதும், சிறுவயதுமுதலே தாயகத்தினிடம் அளவற்ற பற்று. எந்த நாட்டிலே உலவினாலும், இத்தாலியைப் பற்றிய எண்ணம் மனதில் கனிந்து நிற்கும். நீலநிற வானமுள்ள என் இத்தாலி எங்கே, இந்த வண்ண மற்ற வானம் தெரியும் நாடு எங்கே! என்று ஏங்கிக் கூறிக் கொள்வார். மடாலயத்திலிருந்து தப்பி ஓடியபோது, சுவிட்சர்லாந்து நாட்டு எல்லையருகே நின்று, இத்தாலியை விட்டுப் பிரிகிறோமே, மீண்டும் இங்குவருவோமா எனக்குத் தொட்டில் தந்த இத்தாலி, கல்லறைதான் தர இருக்கிறதா? இங்கு நான் வாழ இடமில்லையா? தாயகமே ! பேயகமாக மாற்றப்பட்டு விட்டாயே என்றெல்லாம் எண்ணிக் கசிந்துருகினார் ப்ரூனோ. போர் உள்ளமும் தாயக்ப் பற்றும், ப்ரூனோவை சதிகாரனிடம் சிக்கவைத்தது.

ரோம்நாட்டு மத அதிபர்கள், தமது எதிரிகளை கண்ணி வைத்துப் பிடிப்பதில் கைதேர்ந்தவர்கள். அவருக்கும் அவர்கள் வலைவைத்தனர்--ஆனால் அவருக்குத் துணையாக மன்னர் சிலரும் மக்கள் பலரும் திரண்டு நின்றதாலும். அன்றைய அரசியல் நில மாற்றங்கள் அவருக்குச் சாதகமளித்ததாலும், அவர் தப்பிந்துக் கொண்டார் ரோம் மத அதிபரின் ஆதிக்கத்தை அழிக்கும் பிராடெஸ்டென்டு புயல் கிளம்பிய நாள் தொட்டு, மோப்பம் பிடித்துச் செல்லும் வேட்டை நாய்கள் போன்ற ஒற்றர்கள் பல்வேறு நாடுகளிலும் சுற்றிய வண்ணம் இருந்தனர். அவர்களுக்கு, ப்ரூனோவின் நடவடிக்கைகள் யாவும் நன்கு தெரியும். இத்தாலிய மண்ணிலே, ப்ருனோ கால்வைத்ததும் கவ்விக்கொள்ளக்-