பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. என். அண்ணாதுரை

37


யுடன் நெருங்கிய தோழமை பூண்டிட முடிந்தது. சாலைகளில் நடப்பார், சோலைகளில் உலவுவார், குன்றின் மீது ஏறி நின்று, சுற்றிலும் தெரியும் கோலம் கண்டு களிப்பார்! வெனிஸ் மாளிகையின் அமைப்பும், இயற்கை அழகை அவருக்கு அள்ளித் தருவதாக அமைந்திருந்தது. கடலோரம் மாளிகை!

ஓரிரவு அற்புதமான நிலவு! அலங்காரப் படகு ஏறி மாணவனுடன் சென்று, கடற்காட்சி கண்டுவிட்டு, ப்ரூனோ திரும்புகிறார். மாணவனுக்குப் பாடம் கற்றுத் தருகிறார்--அவரே பாடம் பெறுகிறார், இயற்கையைக் கண்டு களிக்கிறார். இதற்கு இணையான இன்பம் வேறு ஏது என்று கேட்கிறார். பால்வண்ண நிலவைக் கருநிறமேகம் கவ்விக் கொள்வதுண்டு -- ஆனால் நிலவு அதனைக் கிழித்தெறிந்து விட்டு வெற்றி ஒளி வீசும் ! ப்ரூனோவைக் கவ்விக்கொள்ள, கருமேகமல்ல, கருநாகம், மனித உருவில் வந்தது. மத விசாரணைக் குழுவினர், சீமானிடம் செய்து வைத்திருந்த ஏற்பாட்டின்படி, முகமூடி அணிந்துகொண்டு மாளிகை நோக்கி வருகின்றனர். கடற்பயணம், நிலவொளி. அறிவு தரும் இன்பம் இவைகளில் திளைத்திருக்கிறார் ஜியார்டனோ--அக்ரமக்காரர்கள் அவர் அறியாவண்ணம், மெல்ல மெல்ல நடந்து வருகிறார்கள் அவரை நோக்கி. இயற்கையின் இனிமைபற்றி அவர் வண்ணச் சிந்து பாடுவது போலப் பேசி மகிழ்கிறார். வன்னெஞ்சர்கள் அவரருகே வந்துவிட்டனர், பின்புறமாக! எல்லையற்ற இன்பமே! இயற்கை அழகே! என்று அவர் மன எழுச்சியுடன் கூறுகிறார், கருப்புப் போர்வையைச் சரேலென அவர்மீது வீசி அவரைச் சிறைபிடிக்கின்றனர், கயவர்கள்! ஒரு கணம்! எங்கும் இருள் சூழ்ந்து கொண்டது. திடுக்கிட்டார்! சிங்கம் பிடிபட்டுவிட்டது! சிலர் சிறைப்படுத்தப்பட்டார். நிலவின் அழகுகண்டு மகிழ்ந்-