பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. என். அண்ணாதுரை

41


முடியும், கத்தித் திரியட்டும். நமது பக்தர்களின் தொழுகையின் சத்தத்தின் முன்பு இவனுடைய புரட்சிக்குரல் நிற்குமா என்று எண்ணும் துணிவு இல்லை! ஒருவேளை, ப்ரூனோ வென்றுவிட்டால், தங்கள் ஆதிக்கம் என்ன கதி ஆவது என்ற அச்சமே அவனைப் பிடித்தாட்டிற்று.

பிராடெஸ்டன்டுகளைக் கூடச் சகித்துக்கொள்ளலாம்--அவர்கள் அடிப்படையை மறுக்கவில்லை, நமது ஆதிக்கத்தில் இருக்க மறுக்கிறார்கள், எனினும், ஜெபமாலை. தொழுகை, இவைகள் உள்ளன; இவன் போன்றார், அனுமதிக்கப்பட்டால், பிறகு, நமக்கு மிச்சம் என்ன இருக்கும்? இவன்தான், விண்ணிலே சுவர்க்கம் இல்லை. மண்ணுக்கு அடியில் நரகம் இல்லை, என்று பேசுகிறானே. இந்த இரண்டும் இல்லை என்று மக்கள் தீர்மானித்துவிட்டால், நாம் ஏது, நமக்குள்ள இந்த சுவைமிக்க வாழ்வு ஏது, என்று எண்ணினர் -குலை நடுக்கமெடுத்து விட்டது கொளுத்துங்கள் இவனை என்று கொக்கரித்தனர்.

பழிபாவத்துக்கு அஞ்சாத பாவியாக இருக்கலாம் ஒருவன்--தாங்கிக்கொள்ளலாம். பாவத்தைத் துடைத்திடும் பரிகார முறை தரலாம். திருத்தலாம்; கொள்ளைக்காரனைக் கூட புண்யவானாகும்படி புத்திகூறி, கோயில் கட்டச் சொல்லலாம்; கசிந்து உருகு காரிகையே! கற்பு இழந்த என்னைக் காப்பாற்று என்று நெஞ்சுருக இறைஞ்சு! நோன்பு இரு திருத்தலங்களைத் தொழுது அடியார்களை வழிபடு. பாவக்கறை கழுவப்படும் என்று கூறி வழுக்கி விழுந்த வனிதையை, மீண்டும் பரிசுத்தமாக்கிவிடலாம் ஆனால் ப்ரூனோ! இவன் பாபம் என்று கூறுகிறீர்களே, எதை? என்றல்லவா, கேட்கிறான். மனிதன் நல்லவனாவதும் கெட்டவனாவதும் அவனிடமே இருக்கிறது. என்று கூறி