பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

எட்டு நாட்கள்


நம்முடைய வேலையைப் பறிக்கிறானே! விட்டுவைத்தால் விபத்து நிச்சயம், எனவே தீயிலே தள்ளுங்கள் என்றனர்.

"கோயிலை இடிப்பதும் கொளுத்துவதும், பாபம் தானே?"

"நிச்சயமாக, பாபம்தான்"

"இவன் கத்தோலிக்கத் தேவாலயத்கைக் கொளுத்திய மகாபாவி"

"ஏன் கொளுத்தினான் தேவாலயத்தை?"

"பிராடெஸ்டண்டு மார்க்கமாம் எனவே, கத்தோலிக்க மடாலயத்தைக் கொளுத்துவது, புண்ணிய காரியம் என்று கருதிக்கொண்டானாம்."

பிராடெஸ்டெண்டு நீதியாளர்களின், நெரித்த புருவம் மாறிவிடுகிறது-- மன்னிப்புக் கிடைக்கிறது. அதுபோன்றே, கத்தோலிக்கர்கள், பிராடெஸ்டன்டை இம்சை செய்வது, பாவமாகாது என்று கருதி வந்தனர், எனவே பாவம், என்பதற்கே இரு வகையினரும், ஒன்றுக்கொன்று நேர் மாறான விளக்க உரை தரலாயினர்.

ஆனால், ப்ரூனோ. இரு சாராருக்கும் 'ஆகாதவன்!' ஏனெனில் அவன், உலகம் உருண்டை என்று கூறி புனிதக் கருத்துக்களை மறுக்கிறான் ! மாபாவி! எனவே கொளுத்திக் கொல்க என்றனர்.

கோபர்னிகஸ், உலகு பற்றிய தன் கருத்தைக் கூறு முன்பே, மத ஏடுகளைக் கேலிப் பொருளாக்கும் சம்பவ மொன்று நடந்தது. ஆசார்ய புருஷர்களும், அர்ச்சகர்களும், சன்னிதானங்களும், சாதாரணச் சாமியார்களும், நம்பிக்கை-