பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. என். அண்ணாதுரை

43


யுடனும் ஆவேசமாகவும் உலகு, மோட்சம், நரகம் என் பவைபற்றிக் கூறிவந்த உபதேச உரைக்கு வேட்டுவைத்தான். சாதாரணக் கப்பலோட்டி!

மாகெல்லான் என்பவன். ஸ்பெயின் நாட்டில் 'செவில்லி' எனும் கடலகத்திலிருந்து கிளம்பினான் கலத்தில்-மேற்குத் திசையாக ! மேற்குத் திசையாகவே சென்றான்! திசை மாறவில்லை; திரும்பவில்லை; மேலால், மேலால் செல்கிறான் உலகம் தட்டை என்றால். கடைசி பாகம் எது காண்பேன் என்று பிடிவாதம் பேசுகிறான்--"மகனே! மாபாவியாகாதே! அருளாளர்கள் அளித்த உண்மையைச் சந்தேகிக்காதே, உலகம் தட்டைதான்--நீ. கடைசிவரை சென்றால்--அதோ கதிதான்,", என்று மதவாதிகள் எச்சரித்தனர். அவனோ. நான் உலகம் உருண்டை என்று நம்புகிறேன்--உலகின் நிழல், சந்திரன்மீது வீழ்கிறது என்பதை உணர்கிறேன் எனக்கு அந்த நிழல் தரும் நம்பிக்கையை, உங்கள் நிகண்டுகள் தரவில்லை. எனவே நான் செல்வேன், செல்வேன் என்று கூறுகிறான். வென்றான்! மேற்கு நோக்கியேதான் சென்றான். மாகெல்லான் திசை மாறவில்லை. 1519 ஆண்டு ஆகஸ்ட்டு திங்கள் பத்தாம் நாள் செவில்லி விட்டுக்கிளம்பியவன்.1522-ம் ஆண்டு செப்டம்பர் 7-ந் தேதி செவில்லி வந்தடைந்தான் -- ஒரே திசையில் பயணம் செய்து! உலகம் உருண்டைதானே! என்றான். ஆமாம் போலிருக்கிறதே. என்று சிலர் இழுத்தாப்போல் பேசினர், மதவாதிகள் மயக்க மொழி, மாகெல்லான் பெற்ற வெற்றியின் உண்மையை மாய்த்தது. உலகம் தட்டைதான் என்றனர் மக்கள். கோபர்னிகஸ், அறிவாளிகள் உள்ளத்திலேயே புயல் எழக் கூடிய வகையிலே ஏடு தீட்டினான். தேவாலயம் அதனைத் தீண்டாதீர் என்று உத்தரவிட்டது. 1616-ம் ஆண்டு ப்ரூனோ இறந்து பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு, போப்-