பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

உடன்பிறந்தார் இருவர்


தூங்கிக்கொண்டிருக்கும் எண்ணங்களைத் தட்டி எழுப்புகின்றன.

இதே கேள்விகள். அவர்கள் மனதிலே ஆயிரம் முறை எழும்பின--அடங்கின ! மாளிகைகளைக் காணும்போதெல்லாம் இந்தக் கேள்விகள், மனதைக் குடைந்தன ! பசும் வயல்களிலே முற்றிக் கிடக்கும் கதிர்களை அறுவடை செய்த போதும், பழமுதிர் சோலைகளிலே பாடுபட்ட போதும், பாதை ஓரத்தில் நின்று பட்டுடைக்காரருக்கு மரியாதை செய்தபோதும், அவர்கள் மனதிலே இந்தக் கேள்விகள் எழுந்தன !

ஆலயங்களிலே கோலாகல விழாக்கள் நடைபெற்ற பொழுதெல்லாம் இந்தக் கேள்வி ! ஆடல் பாடல் அரங்கங்களிலிருந்து களிப்பொலி கிளம்பிய போதெல்லாம் இந்தக் கேள்வி ! மதுவும் மமதையும் தலைக்கேறிய தருக்கரின் சிவந்த கண்களையும், சிங்காரச் சீமாட்டிகளின் பல வண்ண ஆடைகளையும் கண்டபோதெல்லாம் இந்தக் கேள்வி !

உழைத்து அலுத்து, உண்டது போதாததால் "இடும்பை கூர் என் வயிறே" என்று ஏக்கமுற்ற போது--இந்தக் கேள்வி சகதியில் புரண்டபோது இந்தக் கேள்வி--பன் முறை, இக்கேள்வி மனதிலே எழுந்ததுண்டு--நிலைமை தெரிகிறது--தெரிந்து?

தாயகத்தின் மணிக்கொடி வெற்றிகரமாகப் பறந்து, ஒளி விடுகிறது. வாகை சூடுகிறார்கள் மாவீரர்கள்-விருந்துண்கிறார்கள் சீமான்கள்-- விருதுகளளிக்கும் விழாவுக்குக் குறைவில்லை. ஆண்டவர்களையும் மறக்கவில்லை. அழகழகான கோயில்கள், அலங்காரம், திருவிழா--இந்த வேலைப்பாடுகள் குறைவற உள்ளன--நமக்குத்தான். இருக்க இல்லம் இல்லா வாழ்வில் இன்பம் இல்லை !