பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

உடன் பிறந்தார் இருவர்


தாயகத்தின் வெற்றிகளையும் அவன் கண்டிருக்கிறான்--அந்த வெற்றிக்காக. உழைத்த ஏழையின் இரத்தக் கண்ணீரையும் பார்த்திருக்திறான்.

மமதையாளர்கள் மாளிகைகளிலே மந்தகாச வாழ்வு நடாத்துவதையும் பார்த்திருக்கிறான், உழைப்பாளர் உடல் தேய்ந்து உள்ளம் வெதும்பிக் கிடப்பதையும் கண்டிருக்கிறான்.

இருசாராருக்கும் இடையே உள்ள பிளவு, பயங்கரமான அளவிலே விரிவதும் காண்கிறான், இந்தப் பிளவு, எதிர்கால அழிவுக்கே வழி செய்கிறது என்பதையும் அறிகிறான்.

கைத்திறனும் வாய்த்திறனும் கொண்டவர்கள் கண்மூடி மக்களது நிலத்தை எல்லாம் கொத்திக் கொண்டு ஏப்பம் விடுகிறார்கள் -- இது அபாய அறிவிப்பு என்பது அவனுக்குப் புரிகிறது.

கூலி மக்கள் தொகை தொகையாய் அதிகரிக்கிறார்கள் --புழுப்போலத் துடிக்கின்றார்கள்--இனி புதுக் கணக்குப் போடாவிட்டால், ஓடப்பர் உதையப்பர் ஆகிவிடுவர் என்பது அவனுக்குத் தெரிகிறது. ஆனால், ஆர்பாட்டக்காரர் இதை அறிய மறுக்கிறார்கள். தாயகத்தின் வளத்தை அவர்களே சுவைக்கிறார்கள். செக்கு மாடென உழைக்கும் ஏழை மக்களுக்குச் சக்கை தரப்படுகிறது-- 'பாபம்' போக்கிக்கொள்ள, பல்வேறு கடவுளருக்கு விழா நடத்தப் பணம் இருக்கிறது--பயம் என்ன !

இரண்டாயிரத்து எண்பத்து ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, ரோம் நாட்டில், அங்காடிச் சதுக்கத்தில், காணப்பட்ட காட்சி இது !

"காட்டு மிருகங்களுக்கேனும் குகை இருக்கிறது, நாட்டைக் காக்கும் வீரர்களே ! உங்களுக்கு உறைவிடம்