பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. என். அண்ணாதுரை

53


உண்டோ?" என்று கேட்டான். டைபீரியஸ் கிரேக்கஸ் எனும் இளைஞன்.

இன்று, உலகில் பல்வேறு நாடுகளிலே காணப்படும் எந்தத் துறைக்கும் 'வித்து' ஆதிநாள் ' கிரேக்க--ரோமானிய' அறிவுக் கருவூலம், என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள உண்மையாகும். கிரேக்க. ரோமானிய பேரரசுகளின் பெருமையைக் கூறிவிட்டுத்தான், பிறவற்றைப் பற்றிப் பேசுவர். மேலைநாட்டு வரலாற்றுரை ஆசிரியர்கள். மெச்சத் தக்கதும். பாடம் பெறத் தக்கதுமான பல்வேறு கருத்துக்களை உலகுக்கு அளித்தன, அவ்விரு பூம்பொழில்கள். எனினும் அங்கு உலவி, பிறகு அவைகளை நச்சுக் காடாக்கிய அரவங்கள் சிலவும் உலவின ! வண்ணப் பூக்களையும், அவைகளை வட்டமிட்டு வண்டுபாடும் இசையையும், தாமரைபூத்த குளத்தினையும், அதிலே மூழ்கிடும் கோமளவல்லிகளையும். கண்டு சொக்கிவிட்டால் போதாது--மலர்ப் புதருக்குள்ளே அரவங் காட்டாதிருக்கும் அரவம், பச்சைக் கொடியுடன் கொடியாகக் கிடப்பதையும் கண்டுகொள்ள வேண்டும். ரோம் நாடு இறுதியில், ஆற்றலும் அணியும் இழந்து வீழ்ந்து பட்டதற்கு முக்கியமான காரணமாக இருந்தது, நச்சரவுகள் போன்ற சில நடவடிக்கைகளை, முறைகளை, கருத்துகளை நீக்காமற் போனதேயாகும்.

ஏழையர் உலகின் பெருமூச்சுக்கு, ரோம், மதிப்பளிக்க மறுத்தது-- தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் கொடு நோய்க்கு ஆட்பட்டது, மண்டிலங்களைப் புதிது புதிதாக வென்று, மணிமுடிகளைப் பறித்துப் பந்தாட்டமாடி மகிழ்ந்தது. பஞ்சை பராரிகளை, அடக்கி வைப்பதே அரசியல் முறை என்று எண்ணிக்கொண்டது. ஒரு அரசின் மாண்பு அது களத்திலே பெறும் வெற்றிகளின் அளவைப் பொறுத்து இருக்கிறது என்பதையே குறிக்கோளாக்கிக்