பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

உடன்பிறந்தார் இருவர்


கொண்டு, வரண்ட தலையர் தொகை வளருவதை பிரச்னையாகக் கருதாமற் போயிற்று--கீறல். வெடிப்பாகி, வெடிப்பு ஓட்டையாகி, கலம் கவிழ்ந்தது போலாகிவிட்டது. நாட்டின் கதை.

ரோம் நாட்டு வீரம், பிற நாடுகளைப் பீதி அடையச் செய்தது--காலில் வீழ்ந்து கப்பம் கட்டிய நாடுகள் பல -- களத்திலே நின்று அழிந்துபட்டன பல--ரோம் நாட்டு வீரப் படையினர், புகாத நகர் இல்லை. தகர்க்காத கோட்டை இல்லை, பெறாத வெற்றி இல்லை, என்று பெருமை பேசிக் கொண்டு, ஒளிவிடும் வாளை ஏந்திய தேசத்தில், எதிரியின் முடியையும், அதனை உறையிலிட்ட நேரத்தில் இன்பவல்லிகளின் துடி இடையையும் வெற்றிப் பொருளாகக் கொண்டு வாழ்ந்து வந்தனர், மேட்டுக் குடியினர் -- நாட்டுக்காக உழைக்கும் ஏழையரோ, டைபீரியஸ் கிரேக்கஸ் கூறியபடி. காட்டு மிருகங்களைவிடக் கொடிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

டைபீரியஸ் கிரேக்கஸ். ஏழையர் சார்பில் பேசும் நாட்களிலே, ரோம், வெற்றி பல கண்டு, செல்வமும் செல்வாக்கும் கொழிக்கும் அரசு ஆகிவிட்டது. வளமற்ற நிலத்திலே வாட்டத்துடன் உழைத்துக் கொண்டு பலன் காணாது தேம்பித் தவிக்கும், பஞ்சபூமியாக இல்லை, ரோம். அண்டை அயல் நாடுகளிலே, அதன் கீர்த்தி பரவி இருந்தது. வளம் பெருகி வந்தது.

ஆப்பிரிக்காவிலே 300 நகரங்கள் கப்பம் கட்டி வந்தன. ஸ்பெயின், சார்டீனியா, சிசிலி ஆகிய பூபாகங்களிலே, பெரும் வெற்றிகளைக் கண்டு, தரைப்படை மட்டுமல்லாமல் திறமிக்க கப்பல் படை கொண்டு, வாணிபம் நடாத்திச் செல்வத்தை ஈட்டி, பல நூற்றாண்டுகளாக வெற்றிக்கொடி நாட்டி வாழ்ந்த, கார்த்தேஜ் எனும் மண்டலத்தை ரோம்