பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

உடன்பிறந்தார் இருவர்


அந்தச் சமயத்தில் ஏழையர் உலகு ஏக்கத்தால் தூக்கமிழந்து, நெளிந்தது. இதைக் கண்டு உள்ளம் வாடினான் டைபீரியஸ் கிரேக்கஸ். தன் தொண்டு மூலம் ஏழையரை உய்விக்க வேண்டும் என்று தீர்மானித்தான்.

வையகம் வியக்கும் அறிவுக் கருவூலப் பெட்டகமென விளங்கிய கிரேக்கநாடு, இருப்புச் செருப்பினரால் முறியடிக் கப்பட்டது: அந்நாட்டு அறிஞர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் ஆகியோர், ரோம் நாட்டிலே அடிமைகளாக அமர்ந்து எஜமானர்களுக்கு கலையின் நேர்த்தியையும் காவியத்தின் மேன்மையையும் எடுத்துக்கூறி இன்பமூட்டி வந்தனர். உலக வரலாற்றிலே மனதை உருக்கவல்லதான நிகழ்ச்சி இது. தோற்ற கிரேக்கர்கள், வெற்றிபெற்ற ரோம் நாட்டவருக்கு அடிமைகளாகி, அதேபோது ஆசான்களாகி இருந்துவந்தனர். களத்திலே கண்டெடுத்த கொள்ளைப் பொருள்களைக் காட்டி மகிழ்வதுடன் ரோம் நாட்டுச் சீமான், அடிமையாகக் கொண்டுவந்த கிரேக்கக் கவிஞனையும் காட்டிக் களிப்பான். 'பாடு' என்பான் படைத்தளபதி. கிரேக்கக்கவி அரும் பாடலை அளிப்பான், அதன் பொருளையும் அளிப்பான்--இன்பமும் அறிவும் குழைத்தளிப்பான். அடிமைதரும் இன்னமுதை உண்டு மகிழ்வான் ரோம் நாட்டுச் சீமான்.

போர்த்திறனைப் பெறுவதுதான், வாழ்வில் உயர்வளிக்கும் என்பதையும், வீரவெற்றிகள் பெற்றவனை நாடு தலைவனாகக் கொள்கிறது என்பதையும் கண்டுகொண்ட ரோம் நாட்டு உயர்குடியினர், அந்தத் துறையிலேயே ஈடுபட்டனர்; அரசு அவர்களை ஆதரித்தது. போற்றிற்று.

டைபீரியஸ் கிரேக்கஸ், இத்தகைய புகழ்ஏணி மூலம் உயர்ந்திருக்கலாம்; செல்வக்குடி பிறந்தவன். கீர்த்திவாய்ந்த குடும்பத்தினன், போர்த்திறனும் பெற்றிருந்தான். ஆப்ரிக்-