பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி .என்.அண்ணாதுரை

57


காவில் மண்டிலங்களை வென்று, விருதுபெற்ற ஸ்கிபீயோ என்பானின் பெண்வயிற்றுப் பேரன், டைபீரியஸ்கிரேக்கஸ். எனவே, ரோம் நாடு அவனுக்கு உயர்மதிப்பளிக்கத் தயாராக இருந்தது. டைபீரியஸ் கிரேக்கஸ், கெயஸ் கிரேக்கஸ் எனும் இரு புதல்வர்களுக்கும் தாயார் கர்னீலியா. நாட்டவரின் நன்மதிப்பைப் பெற்றார். ஆழ்ந்த அறிவும், சிறந்த பண்புகளும் மிக்க அந்த அம்மையின் சொல்லுக்கு நல்ல செல்வாக்கு உண்டு. ஸ்கிபியோவின் மகள் கேட்கும் எந்தப் பதவியையும். உயர்வையும் டையீரியசுக்குத்தர, எந்த ரோம் நாட்டுத் தலைவனும், மறுத்திட முடியாது. வாழ்வில் இன்பம், அரசில் பெரும்பதவி பெற்று, ஒய்யார வாழ்வு நடத்திவர, வாய்ப்பு இருந்தது, டைபீரியஸ் கிரேக்கசுக்கு. எனினும் அவன், பிறருக்காக வாழப்பிறந்தவன். ஏழையரின் இன்னலைத் துடைப்பது, புதுமண்டிலங்களை வெல்வதிலும் மேலான வெற்றி என்ற எண்ணம் கொண்டவன்.

வெறியன்! என்றனர், சிலர். மயக்கமொழி பேசுகிறான். ஏழை மக்களை ஏய்த்துத் தன் பக்கம் திரட்டிக் கொள்ள! என்றனர், சிலர். அனைவரும் இவன் கவனிக்கப்பட வேண்டியவன் என்று கூறவேண்டி இருந்தது. டைபீரியஸ், நாட்டுக்கு ஒரு பிரச்னையாகி விட்டான்.

அவனை ஒத்த இளைஞர்கள்போல அவன் சோலைகளையும் சொகுசுக்காரிகளையும் நாடிச் செல்லும் சுகபோகியாக இல்லை; எளிய வாழ்க்கை நடத்திவந்தான். ஏழையருடன் பழகிவந்தான். களத்திலே பெற்ற வெற்றிகளை எடுத்துக் கூறி, காதற் கனி பறித்து மகிழ்ந்திருக்கும் காளையர் பலப் பலர். டைபீரியஸ், அவர்கள் போலல்லாது, நாட்டுக்கு உண்மையான சீரும் சிறப்பும் ஏற்பட வேண்டுமானால் வறியவருக்குள்ள வாட்டம் தீர்க்கப்படவேண்டும் என்று