பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

எட்டு நாட்கள்


கள். சிறையிலே தள்ளப்பட்டுக் கிடந்தவனின் உள்ளத்தின் மேன்மையை உணர முடியாத உலுத்தர்கள்.

"அரசை இழந்துவிடச் சம்மதித்தால் உயிரோடு இருக்கலாம்" என்றால், அரசு இழக்கலாம், உயிர், இருக்கட்டும். உயிர் இருந்தால் புது அரசு கிடைத்தாலும் கிடைக்கும், இல்லை எனினும் பரவாயில்லை, குடும்பத்தாருடன் இனிது வாழலாம் என்றே, அரசாள்பவன் கூறுவான். அங்ஙனம் உயிர் தப்பினால் போதும் என்று மணி முடியைக் கீழே வீசிவிட்டு ஓடின மன்னர்களின் கதையை அவன் அறிவான். அவனை அவர்கள் இழக்கச் சொன்னது

"அறிவை"

இயலாது, என்றான்; அறிவுவேண்டி நின்ற ஒரே கு றத்துக்காக, அவனைச் சுட்டுக்கொல்வது என்று தீர்ப்பளித்தனர்.

அறிவு வேண்டுகிறான் -- என்பதை எப்படிக் குற்றச்சாட்டு ஆக்கமுடியும்? எனவே ப்ரூனோ ஒரு நாத்தீகன் என்று குற்றம் சாட்டப்பட்டான்.

நாத்தீகன்! இந்த ஒரு சொல்லைக் காட்டி, எத்துணைக் கொடுமைகளைச் செய்துள்ளனர்! எவரெவர்மீது அந்தச்--சொல்லம்பு வீசப்பட்டது!

எது ஆத்தீகம்? எது நாத்தீகம்?

விளக்கம் தந்தனரா? இல்லை! எங்கு யார் ஆதிக்கத்தில் உள்ளனரோ அவர்கள் கொண்டுள்ள வழிபாட்டு முறையை ஏற்க மறுப்பவன், நாத்தீகன் என்று குற்றம் சாட்டப்பட்டான். வழிபாட்டு முறையை மட்டுமல்ல. ஆதிக்கத்-