பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

உடன்பிறந்தார் இருவர்


டைபீரியஸ், அடக்கமாக, அமைதியாகப் பேசுவான். இளையவன், கனல்தெறிக்கப் பேசுவான், கடுமையாகத் தாக்குவான்.

இருவரும் செல்வர்கள் இழைக்கும் கொடுமைகளை எதிர்த்தே பேசுவர்--ஏழைகள் சார்பிலேயே வாதாடுவர்; இருவரும் இலட்சியவாதிகள்.

இருவரையும், செல்வர் உலகம், எதிர்த்தொழிக்காமல், விட்டா வைக்கும் !! டைபீரியஸ், பையப் பையப் பெய்யும் மழை போன்று பேசுவான்--குளிர்ந்த காற்று--வளமளிக்கும் கருத்து மாரி!

கெயஸின் பேச்சிலே புயல் வீசும்--பொறி கிளம்பும்.

பேசிக்கொண்டிருக்கும் போதே உணர்ச்சிவயத்தனாகி மேலங்கியை வீசுவானாம். இங்குமங்கும் அசைந்து ஆடிய படிஇருப்பானாம், கெயஸ் கிரேக்கஸ். அண்ணனோ, கம்பத்தில்கட்டி விடப்பட்ட விளக்கு ஒரு சீராக ஒளிதரும் பான்மைபோல, அறிவுரை நிகழ்த்துவானாம்,

இருவருடைய வாதத் திறமையையும் ஆற்றலையும், எதிர்த்துப் பேசி வெல்ல வல்லவர்கள் ரோம் நகரில் இல்லை--திறமைமிக்க பேச்சாளியானாலும், அநீதிக்காகப் போரிடும் போது, திறமை சரியத்தானே செய்யும்.

கெயஸ் கிரேக்கஸ் பேசிக் கொண்டிருக்கும் போது, எழுச்சி அலை எனக் கிளம்புமாம், உரத்தகுரலெடுத்து ஆவேசமுறப் பேசுவானாம். குரல் மங்குமாம், வார்த்தைகள் தேனொழுக்காக வராதாம்! அவனுடைய பணியாள் ஒருவன், இதனை, கெயசுக்கு உணர்த்துவிக்க, சிறு குழல் எடுத்து ஊதுவானாம், உடனே கெயஸ் குரலைச் சரிப்படுத்திக் கொள்வானாம், உண்மைக்காகப் பரிந்து பேசும்போது, தன்னையும் மறந்து விடும் நிலை,கெயசுக்கு!