பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. என். அண்ணாதுரை

63


டைபீரியஸ் தண்ணொளியும், கெயஸ் வெம்மை மிக்கதுமான, பேச்சினை வழங்குவர்--இருவரின் பேச்சும் சீமான்களுக்குச் சீற்றத்தையும் அச்சத்தையும் சேர்த்தளித்தது.

செல்வக் குடிபிறந்தவர்கள். ஏன் இந்தப் போக்கிட மற்றவர்களுக்காகப் போரிடக் கிளம்புகின்றனர் ! திறமையைக் காட்ட வேறு முறையா இல்லை ! களம் இருக்கிறது. கட்கமெடுத்துப் போரிட்டு, காவலர்களின் முடிதரித்த சிரங்களைச் செண்டுகளாக்கி வீர விளையாட்டு ஆடிக் காட்டலாம்; உடற்பயிற்சிக் கூடங்கள் உள்ளன. அங்கு ஆற்றலைக் காட்டி நாட்டுத் தலைவர்களின் நல்லாசி பெறலாம்; குதிரை ஏற்றம், தேரோட்டம், என்றெல்லாம் வீர விளையாட்டுகள் விதவிதமாக உள்ளன, அவைகளிலே ஈடுபட்டு புகழ் ஈட்டாது, வரண்ட தலையரிடம் சென்று, விபரீத திட்டங்களைப் பேசிக்கொண்டிருக்கிறார்களே, ஏன் இந்த வீண்வேலை எதற்காக இந்த ஆபத்தான செயலில் ஈடுபடுகின்றனர், என்று செல்வர்கள் பேசினர்--ஏசினர். டைபீரியசும், கெயசும், தூண்டிவிடும் தலைவர்கள். என்று செல்வர் கண்டித்தனர்; மக்களோ, வாழ்த்தினர்.

ரோம் நாட்டுக் கீர்த்தி பரவியது. இடிமுழக்கமெனப் பேசும் பேர்வழிகளல்ல, எதிரியின் வேலுக்கு மார் காட்டி நின்ற வீரர்களால், அகழ்களைத் தாண்டி, கோட்டைகனைத் தாக்கிக் கொடி மரங்களைச் சாய்த்து, உயிரை துச்சமென்று கருதி வீரப்போரிட்டு வெற்றி கண்டவர்களால், அணி அழகும் உவமை நயமும், கலந்து, புன்னகையும் பெரு மூச்சும் காட்டிப் பேசிடும் நாநர்த்தனக்காரரால் அல்ல; கூர் வாள் ஏந்தத் தெரிந்தவர்கள், சந்தைச் சதுக்கத்திலே நின்று கொண்டு, சாய்ந்தீரே ! மாய்ந்தீரே!" என்று ஏழை மக்களிடம் அழுகுரலில் பேசுவதும், எழுக! வருக! போரிடுக!" என்று தூண்டிவிடுவதும், எளிதான காரியம்.