பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. என். அண்ணாதுரை

65


ரியசின் ஆற்றலால் உயிர்தப்பிய போர் வீரர்களும், அவர்களுடைய குடும்பத்தாரும் திரண்டு வந்து நின்றனர், பெரியதோர் நன்மையை நாட்டுக்குச் செய்த டைபீரியசையா கண்டிக்கத் துணிகிறீர்கள்--என்ன பேதமை--ஏன் இந்தப் பொறாமை! என்று ஆர்ப்பரித்தனர். இந்த எழுச்சியைக் கண்டே, கண்டனத்தை விட்டுவிட்டனர். ஆனால் சீமான்களின் சீற்றமும் பொறாமையும், புற்றுக்குள் பாம்பென இருந்துவந்தது.

இந்தப் போரிலே, டைபீரியஸ் வீரமாகவும் ராஜதந்திரமாகவும் பணியாற்றிப் பெரும்புகழ் பெற்றான்--ஆனால் இந்தப் புகழைவிட, பயன் தரத்தக்க மற்றோர் பாடம் இந்தச் சமயத்தில் அவனுக்குக் கிடைத்தது.

களம் நோக்கி அவன் சென்றதாலை. வழி நெடுக அவன் கண்ட பட்டி தொட்டிகளெல்லாம் பாழ்பட்டுக் கிடந்தன; சிற்றூர்களிலே மக்கள் இல்லை, அங்கொருவரும் இங்கொரு வருமாக அயல் நாட்டிலிருந்து தருவிக்கப்பட்டிருந்த அடிமைகள் காணப்பட்டனர். இந்தக் காட்சி, டைபீரியசுக்குக் கருத்தளித்தது. நாடு காடாகிறது. நல்ல உழைப்பாளிகள், கிராமத்தில் வாழ வகையின்றி, வெளி இடங்களை நாடிச் சென்று விட்டனர்; காரணம், அவர்களுக்கு வயல் இல்லை. குடில் இல்லை. தொழில் இல்லை. இந்நிலைக்குக் காரணம், அவர்களிடம் இருந்த நிலமெல்லாம். செல்வர் கையிலே சிக்கிக்கொண்டதுதான். மீண்டும் நாட்டுக் குடி மக்கள் வளம்பெறவேண்டும் அறம் அதுதான், அன்பு நெறியும் அதுதான்--அரசு கொள்ளவேண்டிய முறையும் அதுதான்--இதற்காகவே நாம் இனிப் போரிடவேண்டும், என்று டைபீரியஸ் தீர்மானித்தான். ரோம் திரும்பியதும் இந்தத் திருப்பணியைத் துவக்கினான், மக்கள் திரண்டனர்.


எ - 5