பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

உடன் பிறந்தார் இருவர்


"உழவனுக்கு நிலம் வேண்டும்"

"நிலப் பிரமுகர்களை ஒழித்தாக வேண்டும்

"ஏழைக்கு எங்கே இல்லம்!"

சுவர்களிலும், வளைவுகளிலும், இந்த வாக்கியங்கள் எழுதப்படுகின்றன ! ஏழை விழித்துக்கொண்டான்--உரிமையைக் கேட்கத் தொடங்கிவிட்டான் ; டைபீரியசின் பேச்சு, ஊமைகளைப் பேசச் செய்துவிட்டது.

குறிப்பிட்ட அளவுக்குமேல் நிலத்தைக் குவித்து வைத்துக்கொண்டிருக்கும் செல்வர்கள், அளவுக்கு மேற்பட்டு உள்ள நிலத்தை அரசினரிடம் தந்துவிட வேண்டும். அதற்காக அவர்களுக்கு நஷ்டஈடு அளிக்கப்படும்.

அங்ஙனம் பெறப்பட்ட நிலத்தை ஏழை மக்களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும் அவர்கள் சிறுதொகை நிலவரி செலுத்த வேண்டும்.

டைபீரியஸ் கிரேக்கஸ், இந்தத் திட்டத்தை எடுத்துக் கூறினான், மக்கள் இதுதான் நியாயம். ஏற்கனவே இயற்றப்பட்ட சட்டத்தைச் சதி செய்து சாகடித்து விட்டனர்; இப்போது புதுக்கணக்கு வேண்டும், என்று முழக்கினர்.

டைபீரியஸ் கிரேக்கஸ், ட்ரைப்யூனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டான்--மக்களுக்கு வழக்கறிஞனானான்! சீமான்கள் சீறினர்.

உலகை வென்றோர் !- என்று விருது இருக்கிறது; இங்கே, ஏழையின் உள்ளத்தை வென்றோமா!--என்று இடித்துரைத்தான் டைபீரியஸ், புயலொன்று கிளம்புகிறது உடனே பூங்கா அழிந்துபடும். இதனை அடக்கியாக வேண்டும், என்று எண்ணிய சீமான்கள், மார்க்ஸ் ஆக்டேவியஸ் எனும் மற்றோர் ட்ரைப்யூனைச் சரிப்படுத்திக் கொண்டனர். ஒரு ட்ரைப்யூன் கொண்டுவரும் திட்டத்தை