பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. என். அண்ணாதுரை

67


மற்றோர் ட்ரையூன் மறுத்து ஓட் அளித்தால், திட்டம் தோற்றதாகப் பொருள்--சட்டம் அவ்விதம் ஆக்கப்பட்டிருந்தது. ஏழைகளின் 'ரட்சகனாக ' ஏழைகளாலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட மார்கஸ் ஆக்டேவியஸ், மாளிகை வாசிகளுக்கு அடிமையாகி, டைபீரியசின் நல்ல திட்டத்தை எதிர்க்கலானான். மக்கள் வெகுண்டனர். டைபீரியஸ் இனியன கூறினான், இறைஞ்சினான், எச்சரித்தான், பணப் பெட்டிகளிடம் பல்லிளித்துவிட்ட ஆக்டேவியஸ், ஏழைகளுக்குத் துரோகியாகிவிட்டான். டைபீரியசின் திட்டத்தை மறுத்து ஓட் அளித்தான், திட்டம் தோற்றது, சீமான்கள் வெற்றிக் கொட்டமடித்தனர்.

தோல்வி--துரோகம் !--இதனை டைபீரியஸ் எதிர்பார்க்கவில்லை. சீமான்கள் சீறுவர், எதிர்ப்பர், சதிபுரிவர் என்பதை எதிர்பார்த்திருந்தான். ஆனால் ஏழைகளின் பாதுகாவலன் எனும் பதவியைப் பெற்ற ஆக்டேவியஸ், துணிந்து, தன் திட்டத்தைத் தகர்ப்பான் என்று எதிர்பார்க்கவில்லை. எவ்வளவு ஏளனம் கிளம்பியிருக்கும் சீமான்களின் மாளிகையில் ! பணம் செய்யும் வேலையைப் பாரடா, பக்குவமற்றவனே! என்றல்லவா கூறுகிறது. பணக்காரரின் பார்வை, ஏழைக்கு வாழ வழி வகுக்க, கிளர்ச்சிசெய்து, வேலை நிறுத்தம் நடத்தி, ட்ரைப்யூன் எனும் பாதுகாவலர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் முறையைக் கண்டனர் ! வேலியே பயிரை மேய்கிறதே! மான் வழி காட்ட, சிறுத்தை, மான் கன்றுகளைக் கொன்று தின்றதே! என்ன அனியாயம் ! என்ன கேவலம் !! என்று டைபீரியசும், அவன் பக்கம் நின்றோரும் வருந்தினர்; செல்வர் வெற்றிச் சிரிப்புடன் உலவினர்.

டைபீரியஸ், சோர்ந்துவிடவில்லை--மீண்டும் ஓர் சட்டம் கொண்டுவந்தான் -- பழையதைவிட, பரபரப்பும் தீவிரமும் மிகுந்தது.