பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

உடன்பிறந்தார் இருவர்


யாரும் 330 ஏகருக்கு மேல் நிலம் வைத்துக் கொண்டிருக்கக்கூடாது என்பது சட்டம். இப்போது அந்த அளவுக்கு மேல் வைத்திருப்பவர்கள் சட்ட விரோதமான செயலாற்றினார்கள் என்று பொருள்படுகிறது. எனவே அவர்கள் சட்ட விரோதமாக வைத்துக்கொண்டிருக்கும் நிலத்தை சர்க்கார் வசம் உடனே ஒப்படைக்கவேண்டும்."--என்பது டைபீரியசின் புதுத் திட்டம்.

சீமான்களின் அக்கரமத்துக்கு உடந்தையாக இருந்த ஆக்டேவியசேகூட, குற்றவாளியானான் ! சட்ட வரம்புக்கு மீறி அவனும் நிலம் வைத்துக் கொண்டிருந்தான்.

டைபீரியசின் இந்தப் புதிய திட்டத்தை தீவிரமாக. சீமான்களின் கையாளான ஆக்டேவியஸ் எதிர்த்தான். மீண்டும் டைபிரியஸ், பொது நன்மையை எண்ணி நீதியாக நடந்துகொள்ளும்படி, ஆக்ஸ்டேவியசைக் கெஞ்சிக் கேட் டுக்கொண்டான்: ஆக்டேவியஸ் இணங்க மறுத்தான்.

இந்தப் பிரச்னை தீர்க்கப்படும் வரையில் அதிகாரிகள் தமது அலுவலைச் செய்யக்கூடாது என்றான், டைபீரியஸ். அதிகாரிகள் இணங்கினர்.

சனிபகவானுக்கு ஒரு கோயில் உண்டு ரோம் நகரில்! துரைத்தனத்தாரின் பணம் அங்குதான், வைத்திருப்பர், ஏழைகளின் பிரச்னை தீர்க்கப்படுகிற வரையில், கோயிலிலுள்ள பணத்தைத் தொடக்கூடாது, இழுத்துப்பூட்டுங்கள் ஆலயத்தை என்றான் டைபீரியஸ். கோயில் கதவு அடைபட்டுவிட்டது ! டைபீரியசின் வார்த்தைக்கு வலிவு ஏற்பட்டு விட்டது. செல்வர் பீதியுற்றனர்! துக்க உடை அணிந்து வலம் வந்தனராம் !!

வருந்திக்கொண்டு வாளா இருந்துவிடுவாரா. வன்கணாளர்கள்! நமது ஆதிக்கத்தை அழிக்கத் துடிக்கும் இந்த அற்பனைக் கொலை செய்தாக வேண்டும் என்று துடித்-