பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.என். அண்ணாதுரை

69


தனர், சதி செய்யலாயினர், டைபீரியஸ் வாளும் கையுமாகவே உலவ நேரிட்டது.

இவனல்லவா இதுகளுக்காகப் போராடுகிறான்--அடங் கிக்கிடந்ததுகளை ஆர்ப்பரிக்க வைக்கிறான்--இவன் இருக்கு மட்டும் பேராபத்துதான். எனவே இவனை ஒழித்தாக வேண்டும் என்று செல்வர்கள் கொக்கரித்தனர்,

வயலை வளமாக்கியவர்களே! வறுமைதான் உங்களுக்குப் பரிசா? பாதை அமைக்கப் பாடுபட்டோரே! பட்டினி தான் உங்களுக்குப் பரிசா? சித்திரச் சோல களுக்காக உங்கள் செந்நீரைக் கொட்டினீர்கள் ! அற்புதமான கட்டிடங்கள் எழுப்பினீர்கள் உழைப்பால் ! உங்கள் நிலைமை காட்டு மிருகத்துடையதைவிடக் கேவலமாகவன்றோ காணப்படுகிறது! என்று டைபீரியஸ் முழக்கமிடுகிறான்.

சட்டத்தை மீறினவர்கள் செல்வவான்களே! என்று வெளிப்படையாகவே குற்றம் சாட்டுகிறான். ஏழைகளுக்குத் துரோகம் செய்தவர்களை இழுத்து வரச் சொல்கிறான். எவ்வளவு ஆணவம் ! செனட் சபையிலே ஈடில்லா அதிகாரம் செலுத்துகிறோம். நமது மாளிகைகளிலேயோ, எதிரி நாடுகளிலிருந்து கொண்டுவந்த விலையுயர்ந்த பொருள்கள், காட்சியாக இருக்கின்றன. ஏன் என்று கேட்காமல் இருந்துவந்தனர், அந்த ஏழையரை நம்மீது ஏவிவிடுகிறானே கொடியவன். இவனைக் கொன்றால் என்ன, கொல்லாது விடினோ இவன் நமது செல்வாக்கையே சாகடித்து விடுவானே என்று எண்ணினர். சீறினர். டைபீரியஸ் கிரேக்கசைக் கொன்று போடக் கொடியவர்களை ஏவினர்.

டைபீரியஸ் புகுத்த விரும்பிய புதுத் திட்டம் பற்றி வாக்கெடுப்பு நடாத்தும் நாள் வந்தது, செல்வர்கள் கூலிப்-