பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

உடன்பிறந்தார் இருவர்


படையை ஏவி, குழப்பத்தை மூட்டிவிட்டு, வாக்கெடுப்பு நடைபெறாவண்ணம் தடுத்து விட்டனர்.

அன்று அவர்களை அடித்து நொறுக்கும் அளவுக்கு டைபீரியசிடம் ஆட்பலம் இருந்தது. எனினும், இரத்தக் களரியைத்தடுக்கவேண்டும், சிக்கலைத் தீர்க்கும் பொறுப்பை, செனட்சபையிடம் விட்டுவிடலாம், என்று நண்பர் சிலர் கூறிய நல்லுரைக்கு இணங்கி, டைபீரியஸ். அமளியை அடக்கினான்.

செனட் சபை, செல்வரின் சூதுக்கும் சுகபோகத்துக்கும் அரணாக அமைந்திருந்தது. அங்கு, நியாயம் எப்படிக் கிடைக்கும்--சமர் இன்றி பிரச்னையைத் தீர்த்துக்கொள்ளும் சகல வழிகளையும் பார்க்கவில்லை என்று பிறகோர் நாள் எவரேனும் குற்றம் சாட்டுவரே என்பதற்காகவே, டைபீ ரியஸ், செனட் சபையிடம் பிரச்னையை அனுப்பிவைத்தான் நம்பிக்கையுடன் அல்ல. அவன் எதிர்பார்த்தபடியே, செனட் சபை மழுப்பிற்று, மிரட்டிற்று காரியமாற்றவில்லை. மீண்டும் மக்களிடம் வந்தான் டைபீரியஸ்.

ஏழைகளுக்கு இதமளிக்கும் திட்டத்தை எதிர்ப்பவன். ஏழைகளாலேயே டிரைப்யூன் ஆக்கப்பட்ட ஆக்டேவியஸ் தானே! அவனைப் பதவியிலிருந்து அகற்றினாலொழிய வெற்றி கிடைக்காது. எனவே, மக்கள், அவன் தேவையா? என்று தாமே தீர்ப்பளிக்கட்டும் என்று டைபீரியஸ் கேட்டுக் கொண்டான்.

ஏழைகளுக்காகவே நான் புதிய திட்டம் கொண்டு வருகிறேன்--அதை நீ மறுக்கிறாய் ஏழைகளுக்கு என் திட்டம் கேடு பயக்கும் என்று உன்னால் காரணம் காட்ட முடியுமானால், மக்களிடம் கூறி, என்னைப் பதவியிலிருந்து நீக்கிவிடச் சொல். என்று அறைகூவி அழைத்தான், டைபீரியஸ், ஆக்டேவிஸ் முன்வரவில்லை. பிறகே, டைபீரியஸ்