பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. என் அண்ணாதுரை

71


ஆக்டேவியசை பதவியிலிருந்து நீக்கும்படி மக்களிடம் முறையிட்டான். வாக்கெடுப்பு துவங்கிற்று. முப்பத் தைந்து 'ஆயத்தார்கள்' கூடினர். அவர்களில் 17 ஆயத்தார், ஆக்டேவியஸ் நீக்கப்படவேண்டும் என்று வாக்களித்தனர், பெருங்குணம் படைத்த டைபீரியஸ், அப்போதும், வெற்றி எவர்பக்கம் என்பது விளங்கிய அந்த வேளையிலும், பழி தீர்த்துக்கொள்ளும் உணர்ச்சி கொள்ளாமல், தோழமை பேசி, ஆக்டேவியசைக் கட்டித்தழுவி முத்தமிட்டு, வேண்டலானான். "வேண்டாம் வீண்பிடிவாதம்! ஏழைகள் உய்யும் திட்டத்தை நீயும் ஆதரித்து நற்பெயர் பெறு!" என்று கெஞ்சினான். உருக்கமான வேண்டுகோள்: ஆக்டேவியசுக்குக் கூட கண்களிலே நீர் ததும்பிற்றாம். எனினும் அவனை அடிமைப்படுத்தி விட்ட, செல்வர்கள் அங்கிருந்தனர். அவர்களைக் கண்டான் ஆக்டேவியஸ், கருணை கருகி விட்டது. வஞ்சகம் படமெடுத்தது, இணங்கமுடியாதெனக் கூறிவிட்டான். வாக்கெடுப்பு தொடர்ந்து நடந்தது. ஆக்டேவியஸ், நீக்கப்பட்டான்.

ஆக்டேவியஸ், பதவி இழந்தான். ஆனால் டைபீரியஸ் வெற்றியால் வெறியனாகவில்லை--பண்புடன் நடந்து கொண்டான். ஆக்டேவியஸ் ஒரு அம்பு என்பதை அவன் அறிவான், அவனிடம் கோபம் அல்ல, பரிதாபம்தான் பிறந்தது. ஏழைகளுக்கென்று அரசியல் சட்டத்தின்படி ஏற்படுத்தப்பட்ட பாதுகாவலனைக் கொண்டே ஏழையை நாசமாக்கக் கூடிய வலிவு, செல்வர்கள் பெற்றிருக்கிறார்களே, என்பதை எண்ணியே டைபீரியஸ் துக்கித்தான்.

ஆக்டேவியசை, மக்கள் தாக்கியபோது கூட, டைபீ லியஸ் ஓடிச்சென்று அவனைக் காத்து, மக்கனை அடக்கினான். டையீரியசின் வழி நிற்கக்கூடிய மியூஷியஸ் என்பான் ட்ரைப்யூன் ஆக்கப்பட்டான். செனட் சபை, டைபீரிய-