பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. என். அண்ணாதுரை

73


"திட்டமிட்டு வேலை செய்கிறான்; ஏழைகளை ஏவி விட்டு, செல்வர்களை அழிப்பது, பிறகு அதே ஏழைகளை ஏய்த்துவிட்டு, அரசன் ஆகிவிடுவது, இதுதான் அவன் திட்டம்!"

"முடிதரித்துக் கொண்டால். தீர்ந்தது; பிறகு, நாடு அவன் காலடியில்தானே!"

"ஏழை மக்களுக்கு எங்கே அவனுடைய வஞ்சகம் தெரிகிறது"

இவன் எவ்வளவு உரிமை உள்ளவனோ, அதே அளவு உரிமை படைத்தவன்தானே, ட்ரைப்யூனாக இருந்த ஆக்டேவியஸ். அவனைப் பதவியிலிருந்து விரட்டினானல்லவா! சரியா அது ? மக்களுக்கு இழைத்த துரோகமல்லவா ? கொடுங்கோலர்கள்கூட, ட்ரைப்யூனை நீக்கமாட்டார்களே! எவ்வளவு அரும்பாடுபட்டு மக்கள், ட்ரையூனைப் பெறும் உரிமையைப் பெற்றனர். ஒரு கணத்தில் ஒழித்துவிட்டானே!"

"எல்லாம். அரசனாவதற்காகத்தான்!"

இவ்வண்ணம் பலமான தப்புப் பிரச்சாரம், மக்களுக்கு மன்னனாக யாராவது முயற்சிக்கிறார்கள் என்றால் போதும். ஆத்திரம் பொங்கும், அவ்வளவு அல்லலை அனுபவித்திருக்கிறார்கள், அரசர்கள் ஆண்டபோது. அதிலும், மன்னன் என்ற உடன் மக்கள் மனதிலே, டார்க்வின் என்ற கொடுங்கோலனுடைய நாட்கள்தான், எழும்; எழுந்ததும் பதறுவர். எனவே, டைபீரியஸ், மன்னனாவதற்கு, திட்டமிடுகிறான் என்ற வதந்தி கிளம்பியதும், மக்கள் மனம் குழம்பலாயிற்று, மெள்ள மெள்ள, அவர்கள் மனதைச் செல்வர்கள் கலைத்தனர்.

ஆக்டேவியசை அகற்றியது அக்ரமம்தான் என்று கூடச் சிலர் பேச முன்வந்தனர். மக்கள் ஏமாற்றப்படுவதைக் கண்டு டைபீரியஸ் வருந்தினான்.