பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

நல்ல தீர்ப்பு

உடன் பிறந்தார் இருவர்


"ட்ரைப்யூன் பதவி மகத்தானது--மக்களின் உரிமையையும் நலனையும் பாதுகாக்கும் பெரும் பொறுப்பு வாய்ந்தது--அதனை மதிப்பதே அனைவரின் கடமையாகும். எனினும், மக்களின் 'காப்பாளர்' ஆகப் பதவி பெற்றவர் மக்களுக்கே துரோகம் செய்தால், அவரை விரட்டாதிருக்க முடியுமா! டார்க்வின் எனும் மன்னன் கொடுமை செய்தான்--அதனால் வெறுப்படைந்த நாம், மன்னராட்சி முறையையே ஒழித்துக்கட்டவில்லையா ! மக்களின் நலன்களுக்காகத்தானே பதவிகள்! பதவிகளை அளிக்கவல்ல மக்களுக்கு, அவைகளைப் பறிக்கவும் உரிமை உண்டு. எனவே என் செயல் நியாயமானது--தவறான பிரச்சாரத்தைக் கேட்டு ஏமாந்து போகாதீர், நான் எதேச்சதிகாரமாக நடந்து கொள்ளவில்லை. கெஞ்சினேன். மிஞ்சினான்! கை குலுக்கினேன், கடுமையாக என் தோழமையை நிராகரித்தான். எனவேதான் ஆக்டேவியசைப் பதவியிலிருந்து அகற்றினேன்" என்று விளக்கமுரைத்தான்.

"நான் என் கண்ணாரக் கண்டேன், காட்சியை; ஒரு ஆசாமி, பட்டுப் பட்டாடையும் மணி முடியும் கொண்டு வந்து டைபீரியசிடம் தந்தான்" என்று, டைபீரியசின் பக்கத்து வீட்டுக்காரனே புளுகினான்.

"செல்வர்களின் சூழ்ச்சிக்கு நான் பலியாகிவிடுவேன். உங்களுக்காக உழைத்தேன். ஊரைச் சுரண்டி வாழும் உலுத்தர்களின் சீற்றத்தினுக்கு ஆளானேன். என்னைக் கொல்ல ஏற்பாடு செய்துவிட்டார்கள். நான் கொல்லப் பட்ட பிறகு, இதோ என் குழந்தைகளையும், குடும்பத்தையும் காப்பாற்றும் பொறுப்பு உம்முடையது" என்று கூறி, மக்கள்முன், தன் குழந்தைகளைக் கொண்டுவந்து டைபீரியஸ் நிறுத்தினான்--மக்கள் கசிந்துருகினர்.

அடாலஸ் என்னும் வெளிநாட்டு மன்னன் ஒருவன் இறக்கும், தன் பெருஞ் செல்வத்தை ரோம் நகருக்கு