பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

உடன்பிறந்தார் இருவர்


வாக்கெடுப்புக்கான நாள் வந்துற்றது. மக்கள் சந்தைச் சதுக்கத்தில் திரண்டனர். மாவீரன் டைபீரியஸ் வந்து சேர்ந்தான். மக்கள் ஆரவாரம் செய்து வரவேற்றனர்.

செல்வர்களும் அவர்தம் கையாட்களும் ஒருபுறம் குழுமி இருந்தனர். நெருக்கடியான கட்டம். டைபீரியசைத் தாக்கிக் கொல்ல செல்வர்கள் வருவதாக ஒருவன் 'செய்தி' கொண்டு வந்தான். இது கேட்ட மக்கள் கையில் கிடைத்த ஆயுதத்தை எடுத்துக்கொண்டு அமளிக்குத் தயாராகிவிட்டனர். தொலைவில் இருந்த மக்களுக்கு நிலைமையை விளக்குவதற்காக, டைபீரியஸ் பேச முயன்றான். பெருங் கூச்சல்! எனவே, என்ன சொல்கிறான் என்பது புரியவில்லை. புரியவைப்பதற்காக டைபீரியஸ் தன் தலையைத் தொட்டுக் காட்டினான்--தன்னைக் கொல்லச் செல்வர்கள் துணிந்து விட்ட னர் என்பதை எடுத்துக் காட்டினான்,

ஓடோடிச் சென்றான் ஒருவன் செனட் சபைக்கு டைபீரியஸ், மன்னன் ஆகப்போவதாக அறிவித்து விட் டான்; தன் சிரத்துக்கு மணிமுடி வேண்டும் என்று தெரிவித்துவிட்டான், நானே கண்ணால் கண்டேன் என்று கூவினான். செனட் சபையினர் சீறினர் உடனே டைபீரியசைக் கொன்றாக வேண்டும். கிளம்புக! என்று முழக்க மிட்டான் நாசிகா எனும் கொடியோன்; ஆர அமர யோசிக்க வேண்டும் என்றனர் சிலர்; நாசிகாவோ "பெரும் ஆபத்து நாட்டுக்கு வந்துவிட்டது! நீங்கள் கிளம்பாவிட்டால் நான் செல்கிறேன். துரோகியை ஒழித்துக்கட்ட' என்று கொக்க ரித்தான். உடன் சென்றனர் அவன் போன்ற ஆத்திரக்காரர்கள். ஏற்கனவே செல்வர்கள் திரட்டி இருந்த கூலிப் படை திரண்டது. சந்தைச் சதுக்கத்தில் பாய்ந்தது. பயங்கரமான போர் மூண்டது. முன்னூறு பேர்களுக்கு மேல்