பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. என். அண்ணாதுரை

79


அறம் வீழ்ந்தது! அன்புருவம் உயிரிழந்தது! ஏழை பங்காளன் பிணமானான்! எத்தர்கள் கொட்டமடிக்கின்றனர்! ஏழை மக்கள் கதறுகின்றனர்!

அறிவும் அறமும் குழைத்து வீர உரையாக்கி, சந்தைச் சதுக்கத்திலே நின்றளித்துவந்த சிறந்த பேச்சாளன், கேட்போர் உள்ளத்தைத் தன்பால் ஈர்க்கும் தகைமை வாய்ந்த பேச்சுவல்லோன், பிணமாக்கப் பட்டுவிட்டான். பேயுள்ளம் பூரிக்கிறது. தாயகம் போக்கமுடியாத கறையைப் பெறுகிறது.

கொன்றதுடன் கொடுமையாளர் திருப்தி அடையவில்லை. இழிவும் சொரிந்தனர். கண்களில் நீர் சோர. கெயஸ் கிரேக்கஸ், தன் அண்ணன் உடலை அடக்கம் செய்ய, எடுத்துச்செல்ல அனுமதி கேட்கிறான் மறுக்கப்படுகிறது. ஆப்ரிக்க மண்டிலத்தை ரோமுக்குக் காணிக்கையாகத் தந்த ரணகளச் சூரன், ஸ்கிபியோவின் பேரன் டைபீரியஸ், மகனின் உடலை மாதா பெற முடியவில்லை.

அண்ணன் படுகொலை செய்யப்பட்டதை எதிர்த்து ஏதும் செய்ய முடியாத நிலையில், கெயஸ் கிரேக்கஸ் இருந்தான். வளமற்ற மனமல்ல; நாள் வரவில்லை: பக்குவப்பட்டுக்கொண்டு வருகிறான். ரோம் நாடு எவ்வளவு கொடியவர்களின் உறைவிடமாகிக் கிடக்கிறது என்பது கெயசுக்குப் புரியாமலிருக்குமா! தன் அண்ணனை நினைவிற் கொண்டுவந்தாலே போதும், ரோம் அவனுக்குப் புரிந்து விடும் வெதும்பினான், வெகுண்டான். வாலிப உள்ளம் பழி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றுதானே கொள்ளும். என் அண்ணனைச் சாகடித்த மாபாவியைக் கொன்று போடா முன்னம் ஊணும் உறக்கமும் கொள்ளேன் என்று சூளுரை கூறி, வாள் எடுத்துக்கொண்டு சந்தைச் சதுக்கத்தில் நின்றோ, மாளிகையில் புகுந்து மமதையாளர்களைத் தேடிப் பிடித்தோ பழி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று எண்-