பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

உடன்பிறந்தார் இருவர்


கர்னீலியா துக்கத்தைத் தாங்கிக்கொண்டதன் கருத்தை உணரமுடியாதவர்கள். ஆச்சரியமடைந்தனர். ஆனால் வீர உள்ளம் படைத்த அந்தமூதாட்டி, புலம்பிக்கொண்டு மூலையில் கிடக்கவில்லை. 'ஒரு மாணிக்கத்தை நாடு வாழ காணிக்கையாகக் கொடுத்தேன், தெரிந்துகொள்க!' என்று நாட்டுக்கு எடுத்துரைக்கும் நிலையில் வாழ்ந்திருந்தாள்.

மற்றும் ஒரு மாணிக்கம் இருக்கிறது கெயஸ், இவனையாவது இழக்காமலிருக்க வேண்டும். என்று எண்ணி, அவனை, அண்ணன் கொண்டிருந்த ஆபத்தான வேலையிலே இறங்காதிருக்கப் பணித்திடுவாள், என்று பலர் எண்ணினர். ஆனால் கர்னீலியா. கெயசைத் தடுக்கவில்லை. குடும்பமே, இலட்சியத்தை அணியாகக் கொண்டு விட்டது !

கெயஸ் கிரேக்கஸ், நாட்டு வழக்கப்படி, களத்திலே பணிபுரியச் சென்றான்; துவக்கமே புகழ் தருவதாக அமைந்தது.

சார்டினியா எனும் இடத்தில் நடைபெற்ற சமரில், கெயஸ் புகழ் பெற்றான் -- அதனினும் அதிகமாக, செல்வாக்குப் பெற்றான்.

மாரிகாலம். கடுங்குளிர், போதுமான உடையின்றிப் படை வீரர்கள் வாடினர். ரோம் நகரிலிருந்தோ உதவி கிடைக்கவில்லை. படைத் தலைவன் ஏதுசெய்வதென்று அறியாதிருந்தான், படை வீரர் படும் அவதி கண்டு, நமக்கென்ன என்று வாளா இருக்க மனம் இடம் தரவில்லை கேயசுக்கு. 'நமக்கென்ன' என்று இருந்திருந்தால் சந்தைச் சதுக்கத்திலா இறந்திருப்பான் டைபீரியஸ். செனட் சபைச் சீமானாகவன்றோ இருந்திருப்பான். அவன் தம்பிதானே இவன்! எனவே அல்லலைத் துடைப்பது நமது கடன் என்று எண்ணிான். அண்டை அயலெங்கும் சென்றான், உடை திரட்ட. அவன் காட்டிய ஆர்வமும் கொண்ட