பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

உடன்பிறந்தார் இருவர்


இத்தகைய மக்களுக்காக நான் ஏன் வீணாக உழைக்க. வேண்டும் என்று கேட்கவில்லை, கெயஸ் கிரேக்கஸ்.

மக்களுடைய நிலை இதுதான் என்றாலும், அவர்களுக்கே பாடுபடுவேன்-- நான் தியாகியின் தம்பி ! என்று கூறுவதுபோல, ஆர்வத்துடன் பணியாற்றி வரலானான்.

வெற்றிகள் மூலமாக அரசுக்குக் கிடைக்கும் பொது நிலத்தை ஏழைகளுக்கே பகிர்ந்தளிக்க வேண்டும்,

படை வீரர்களுக்கு உடைகளைப் பொதுச் செலவில் தயாரித்துத் தரவேண்டும்.

பதினேழு வயதாவது நிரம்பப் பெற்றால் மட்டுமே படையில் சேர அழைக்கவேண்டும்.

ரோம் மக்களுக்கு இருப்பதுபோலவே வாக்களிக்கும் உரிமை இத்தாலி மக்கள் அனைவருக்கும் அளிக்கப்பட வேண்டும்.

உணவு தானிய விலையை, ஏழைகளுக்குக் குறைத்திட வேண்டும்.

செனட் சபையின் நீதிமன்ற அதிகாரத்தைக் குறைப்பதுடன், அதிலே ஏழையர்களின் சார்பிலே உறுப்பினர்களைச் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

இவை, கெயஸ் கிரேக்கஸ் தீட்டிய திட்டம், அரசிலே நீதி நிலவவேண்டும். நிர்வாகத்திலே நேர்மை இருக்கவேண் டும், பொதுநலம் எனும் மணம் கமழவேண்டும், என்ற நோக்கத்துடன் கெயஸ் கிரேக்கஸ் தன் புதுத்திட்டத்தைத் தீட்டினான். இறந்துபட்டான், இடர் ஒழிந்தது என்று எண்ணினோம்; இதோ டைபீரியஸ் மீண்டும் உலவுகிறான் கெயஸ் வடிவில் என்று எண்ணினர் செல்வர்.

இந்த அரிய திட்டத்துக்காகப் பணியாற்றிடும் கெயசை மக்கள் போற்றாதிருப்பரா? நமக்குப் பாதுகாவலன் கிடைத்துவிட்டான் என்ற மகிழ்ச்சி அவர்களுக்கு.