பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

உடன் பிறந்தார் இருவர்


துரோகம் செய்யக்கூடும், பலர் அக்கரையின்றிக் காரியத்தைக் கெடுத்துவிடக்கூடும். எனவே, நாமே கவனித்து வேலைகளை முடித்தாகவேண்டும் என்ற தூய நோக்குடன், ஓயாது உழைத்தான், கெயஸ் கிரேக்கஸ்.

மக்கள், கெயஸ் கிரேக்கசை எப்போதும் காணலாம்; ஏதாவதொரு பொதுப்பணியில் ஈடுபட்டிருப்பான்.

பாதைகள் செப்பனிடப்படுகின்றனவா, கெயஸ் அங்கு தான் காணப்படுவான். நிலங்களை அளவெடுக்கிறார்களா, கெயஸ் அங்குதான் ! வேலை செய்வோர் சூழ, இங்குமங்குமாகச் சென்றபடி இருப்பான். இவ்விதம், உழைக்கும் கெயசைக் கண்டு, மக்கள் உள்ளம் பூரித்தனர்.

மக்களின் ஆதரவு கிடைத்துவிட்டது -- காப்பாளர், பதவி கிட்டிவிட்டது --இனி நமது வாதிடும் திறமையைக் கொண்டு, மேற்பதவிகளைத் தாவிப்பிடிப்போம், என்று எண்ணும் சுயநலமிகளையும், மக்களிடம் கெஞ்சிக் கூத்தாடி இடம் பிடித்துக்கொண்டு, காரியமானதும், மக்களை ஏறெடுத்தும் பார்க்காத எத்தர்களையும், மக்களை வாழ்த்தி வணங்கி, வாக்கு பெற்றுக்கொண்டு, வரம் கிடைத்தான பிறகு, வரண்ட தலையரின் தயவு நமக்கு ஏன் என்று இறுமாந்து, மக்களுக்கு, அறிவுரை கூறுவதாக நடித்து அவர்களின் தன்மானத்தைத் தகர்க்கும் தருக்கர்களையும், மக்களின் 'காப்பாளர்' என்ற கெண்டையை வீசி, இலஞ்ச இலாவணம், சீமான்களின் நேசம் ஆகிய வரால்களைப் பிடிக்கும் வன்னெஞ்சர்களையும், எதிரிகளுடன் குலவும் துரோகிகளையும், பார்த்துப் பார்த்து வாடிய நெஞ்சினர் மக்கள்--அவர்கள்முன், ஏழைக்காக அல்லும் பகலும் ஆர்வத்துடன் உழைக்கும் கெயஸ் கிரேக்கஸ் உலவிய போது, மக்கள், நமது வாழ்வின் விளக்கு இந்த வீரன், என்று வாழ்த்தாதிருக்க முடியுமா? மீண்டும் கெயசைக்