பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. என். அண்ணாதுரை

91


காப்பாளராகத் தேர்ந்தெடுத்தனர். வலிய இந்த 'இடம்' தந்தனர். செல்வாக்கு இந்த அளவு செல்லக் கண்டவர்கள் கத்தி தீட்டலாயினர்!

இனிக்க இனிக்கப் பேசுகிறான்--இதைச் செய்கிறேன் அதைச் சாதிக்கிறேன் என்று தேன்சிந்துகிறான்--மக்களின் உரிமை பற்றி முழக்கமிடுகிறான்-- எனவே மக்கள், அவனைப் பின்பற்றுகிறார்கள். இதைக் குலைக்க, இவனைவிடத் தீவிரமாகப் பேசும் ஆளைத் தயாரிக்க வேண்டும். இவன் குளம் வெட்டுவேன் என்றால், அவன் கடல் தோண்டுவேன் என்றுரைக்க வேண்டும் ! இவன் பூமாலை தருகிறேன் என்றுரைத்தால், அவன் பூத்தோட்டமே தருகிறேன் என்று பேச வேண்டும் ! இவ்விதம் ஒருவனைக் கிளப்பிவிட்டால், ஏமாளிகள் தானே மக்கள், இவனை விட்டுவிடுவர், புதியவனைப் போற்றத் தொடங்குவர். இவன் செல்வாக்கு சரியும்; புதியவனோ நடிகன். நம் சொல் தாண்டமாட்டான். பார்த்துக் கொள்வோம், என்று ஒரு தந்திரத் திட்டம் வகுத்தனர், தன்னலக்காரர். இந்தப் பாகத்தைத் திறம்பட ஏற்று நடத்த ட்ரூசஸ் என்பான் முன்வந்தான். அவனுக்கும், செனட்சபைச் சீமான்களுக்கும் ஒப்பந்தம், ஊர் அறியாது இரகசியத்தை.

ரோம் நாடு, வெற்றிபெற்று தனதாக்கிக் கொண்ட நாடுகளிலே. ஏழையர்கள் சென்று குடி ஏற இரண்டு வட்டாரங்கள் அமைப்பது என்று, கெயஸ் கிரேக்கஸ் திட்டம் கூறினான்.

"இரண்டே இரண்டுதானா! பன்னிரண்டு வேண்டும்!" என்றான், நடிப்புத் தீவிரவாதி ட்ரூசஸ்.

ஏழைகள் பெறும் நிலத்துக்காக, அவர்கள் சிறுதொகை வரி செலுத்தவேண்டும் என்றான் கெயஸ்.