பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.என்.அண்ணாதுரை

95


கெயஸ் கிரேக்கசைச் சுற்றிலும் தீயாலான வளையம்- தப்புவது இயலாத காரியம் என்றாகிவிட்டது நிலைமை.

கெயஸ் கலங்கவில்லை! அண்ணனை அடித்து ஒழித்த அதே 'வெறி' தன்னைப் பலிகொள்ள வருவதை உணர்ந்தான்--இது பலி தரும் நாட்கள்-- வெற்றிக்கு அச்சாரம்! என்று எண்ணிக்கொண்டான்.

எவ்வளவு வேண்டுமானாலும் முழக்கமிடுவார்கள்; ஆனால் உயிருக்கு உலைவருகிறது என்று தெரிந்தால், அடங்கி விடுவர்; இதுதான், இந்த ஏழைக்காகக் கிளம்பும் வீரர்கள் இயல்பு, என்று கனவான்கள் கேலி செய்ய விடுவானா டைபீரியசின் இளவல்!

சிறு உடைவாளை எடுத்துச் செருகிக்கொண்டான்; சந்தைச் சதுக்கம் கிளம்பினான்.

கெயசின் துணைவி, நிலைமையை அறிந்தாள்; பதறினாள்.

'ஆருயிரே! செல்லவேண்டாம்! படுகொலை செய்யும் பாதகர்கள் உள்ள இடத்துக்குப் போகாதீர்! பழிபாவத்துக்கு அஞ்சாதவர்கள் அவர்கள்! இன்னுயிரே! களமல்ல. நீர் செல்லும் இடம். களத்திலே வீரம் இருக்கும், வஞ்சகம் இராது. ஆற்றலைக் காட்டலாம். வெல்ல வழி உண்டு, இல்லையேல், வீரமரணம் கிட்டும். ஆனால், வெறியர்கள், எந்த வஞ்சகமும் செய்யக் கூசாதவர்கள் கூடிக் கொக்கரிக்கும் இடம், இப்போது நீர் போக விரும்பும் சந்தைச் சதுக்கம். அன்பே! அங்கு சென்றால், உம்மைப் படுகொலை செய்துவிடுவர்--உடலைகூடத் தரமாட்டார்கள். ஆற்றிலல்லவா அண்ணன் உடலை வீசினார்கள். வேண்டாம், போகாதீர்!" என்று துணைவி கரைந்துருகிக் கதறுகிறாள்; மகன் அழுதுகொண்டு நிற்கிறான். கெயஸ் என்ன பதில் கூற முடியும்? துணைவி கூறுவது அவ்வளவும் உண்மை;