பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. என். அண்ணாதுரை

97


கொள், காரிருள் நீங்கும். கதிரவன் என வெளிவருவாய் பிறகு ' என்று கூறினர்.

கெயஸ் கிரேக்கசுக்கு, அவர்களின் அன்புகனிந்த சொல் மகிழ்வூட்டிற்று. எனினும், நிலைமையும் தெளிவாகப் புரிந்து விட்டது. செல்வர்கள் வெற்றிபெற்று விட்டார்கள் : புரட்சியைப் பொசுக்கித் தள்ளிவிட்டார்கள்; வஞ்சம் தீர்த்துக் கொண்டார்கள். இந்தக் கடும் தாக்குதலுக்குப் பிறகு. ஏழையர் உரிமைப் போர் புரியும் ஆற்றலை மீண்டும் பெறுவதென்பது இயலாத காரியம். இந்தச் சித்ரவதைக்குப் பிறகு, சீரிய முயற்சி எது எடுத்தாலும், மக்கள் ஆதரிக்க முன்வர மாட்டார்கள் என்று எண்ணினான். துக்கம் நெஞ்சைத் துளைத்தது !

"நண்பா!' என்றழைத்தான் தன் உடன்வந்த பணியாளனை.

"என்ன ஐயனே!"

"எனக்கோர் உபகாரம் செய்"

"கட்டளையிடும். ஐயனே! காதகர்மீது பாயவா!"

"வீரம் அல்ல, நண்பனே! நான் உதவி கேட்கிறேன்."

"மனதைக் குழப்புகிறீரே, ஊழியக்காரன் நான்!"

"என்னைக் கொடியவர்கள் கொல்லச் சம்மதிப்பாயா?"

"உயிர் போகும்வரை அவர்களை அழிப்பேன்! ஒரு சொட்டு இரத்தம் என் உடலில் இருக்குமட்டும் உமது பக்கம் நின்று போரிடுவேன்!"

"நன்றி! மிக்க நன்றி! என்னை அக்கொடியவர்கள் கொன்று, வெற்றி வெறி அடைய விடக்கூடாது. கடைசியில் கெயஸ் கிரேக்கஸ், எங்கள் கரத்தால் மாண்டான் என்று செருக்குமிக்கோர் பேச இடமளிக்கக் கூடாது.

எ - 7