பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

உடன்பிறந்தார் இருவர்


கடைசிவரையில் கெயஸ் கிரேக்கஸ் நம்மிடம் சிக்கவில்லை என்று அவர்கள் கூறவேண்டும் !'

"நிச்சயமாக அந்தக் கொடியவர் கரம் தங்கள் மீது பட விடமாட்டேன்."

அவர்களிடம் நான் சிறைப்படுவதும் கேவலம் இழிவு; என் குடும்பத்துக்குக் களங்கம்; நான் கொண்ட கொள்கைக்குக் கேவலம் ஏற்படும்.'

"உண்மைதான்! அந்த உலுத்தர்களிடம் உத்தமராகிய தாங்கள் சிறைப்படுவது கூடவே கூடாது!'

"ஓடிவிடவும் கூடாது! ஓடிவிட்டான் எமக்கு அஞ்சி, கோழை ! என்று தூற்றுவர். சகிக்க முடியாத அவமானம். என் தாய்க்கு நான் துரோகம் செய்தவனாவேன். மாண்டுபோன என் அண்ணன்மீது ஆணை. நான் அத்தகைய இழிவைத் தேடிக்கொள்ள மாட்டேன். ஓடக் கூடாது."

"ஆமாம்! கோழை என்ற ஏச்சு கூடாது!"

"அப்படியானால், நண்பனே! எண்ணிப் பார் ! பணிதல் கூடாது. ஓடி ஒளிவது கேவலம், அவர்களால் கொல்லப் படுவதும் இழிவு ... !"

"ஆமாம் ...!"

"ஆகையால், நண்பனே! உன் கரத்தால் என்னைக் கொன்றுவிடு!"

"ஐயோ! நான் கொல்வதா! தங்கள் பொருட்டுச் சாக வேண்டிய நான், தங்களைக் கொல்வதா!"

"இழிகுணம் படைத்த செல்வர் என்னைக் கொல்வது சரியா, நண்பா! அவர்களிடம் என்னை ஒப்படைக்கலாமா? நண்பன் செய்யும் செயலா? வெட்டுண்ட என் சிரம், அந்த செருக்கர் காலடியில் கிடப்பதா? எனக்கு நீ செய்யும்