பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. என். அண்ணாதுரை

99


'சேவை' இதுவா? விசாரப்படாதே ; நான், இறுதிவரையில் வீரனாகவே இருக்கவேண்டும்; என் எதிரிகளிடம் காட்டிக் கொடுக்காதே, எடு வாளை! வீசு! நான் சாகவேண்டும். அவர்களால் சாகாமலிருக்க "

"இதென்ன கொடுமை!"

"வீரன் தேடும் விடுதலை இது, யோசிக்காதே--எடு வாளை."

"தங்களைக் கொன்ற மாபாவியாகி நான் வாழ்வதா? நான் இறந்து படுகிறேன்."

"நீயும் வீரன், சந்தேகமில்லை. இருவரும் மரணத்தைத் தேடிக்கொள்வோம். எத்தரிடம் சிக்கமாட்டோம். உனக்கு நான். எனக்கு நீ! எடு. வீசு! நானும் வீசுகிறேன்! எடுத்தேன் வாளை!"

வீரன் கெயஸ் கிரேக்கஸ் தன் உடன்வந்த பணியாள் விலோகிராடிசுக்கு நிலைமையை விளக்கினான். உறுதியை வெளியிட்டான்.

பிலோகிராடிஸ் கெயசைக் குத்திக் கொன்றுவிட்டு தானும் குத்திக்கொண்டு இறந்தான்.

டைபீரியஸ்--கெயஸ்--இரு சகோதரர்கள். இணைவில்லா இடம் பெற்றுவிட்டனர் மக்கள் உள்ளத்தில்.

மலைப்பாம்பிடம் சிக்கி, சிக்கிய நிலையிலேயே அதன் வலிவைப் போக்கவாவது முயற்சிப்போம் என்று துணிந்து போராடி, அந்த முயற்சியிலேயே உயிரிழந்த பரிதாபம் போன்றது இரு சகோதரர்களின் கதை.

சீறிவரும் செல்வர்களை எதிர்த்து நின்று தாக்கினர், கொல்லப்பட்டனர். எனினும், அந்த முயற்சியின் போது பூத்த வீரமும், தியாகமும், விழிப்புணர்ச்சியும், மன எழுச்சி-