பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

263

தோற்றுப் போனதால் இப்போது, நமது கொள்கையுடன் அவர்கள் ஏவும் புதிய கருவி மோதிக்கொள்ளும் புதுமுறைப் போர்தந்திரத்தை அவர்கள் கையாளுகிறார்கள்.

இதை நாம் நன்கு உணராமல், கழகம் எனும் நமது அமைப்பை, அவர்கள் ஏவும் புதிய கருவியுடன் மோதிடச் செய்து, கழகத்தை அழித்துக் கொண்டோமானால், பிறகு கொள்கை, தங்கி இருக்க, நடமாட, வளர, செயலாக்கம்