பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திராவிட இயக்க வரலாற்றிலும் – தமிழக அரசியலிலும் ஒரு திருப்பு முனையாக அமைந்த அந்த பொதுக்குழுவில் அண்ணா பேசுவதற்காக அவரே எழுதித் தயாரித்த அந்த உரையை பொதுக்குழு முடிந்த பிறகு என்னிடம் ஒப்படைத்தார்.

அண்ணாவின் அந்தக் கையெழுத்துப் பிரதியை நாற்பது ஆண்டுகளாகப் பாதுகாத்து வைத்துள்ள நான்; அதனை இப்பொழுது நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு வெளியிட விரும்புகிறேன்.

அரசியல் வரலாற்றையே மாற்றிய அந்தப் பொதுக்குழுவின் முடிவையும் – அக்குழுவில் அண்ணா நிகழ்த்திய அற்புதமான விளக்க உரையையும் – படித்துணர ஒர் அருமையான வாய்ப்பு; ‘முரசொலி’ வாயிலாக, வருகிற மே திங்கள் 3 ந்தேதி முதல் கழக உடன்பிறப்புகளுக்கும் – அரசியல் ஆர்வலர்களுக்கும் கிடைக்க இருக்கிறது.

அந்தப் பொதுக்குழுவில் அண்ணா ஆற்றிய உரையில் குறிப்பிட்டிருப்பது போல பொதுக்குழு உறுப்பினர்கள் நீண்ட நேரம் விவாதித்து அண்ணாவின் வேண்டுகோளுக்கிணங்க மனம் விட்டுப் பேசி அண்ணாவின் கருத்துப்படி தி.மு. கழக சட்ட திட்டப் புத்தகத்தில்; இன்றளவும் இடம் பெற்றுள்ள,

குறிக்கோள்

அறிஞர் அண்ணா வகுத்த குறிக்கோளுக்கு ஏற்ப தமிழகம், ஆந்திரம், கேரளம், கருநாடகம் ஆகிய நான்கு மொழி வழி மாநிலங்களிலும் இந்திய அரசுரிமை ஒருமைத்தன்மை, அரசியல் அமைப்புச் சட்டம் ஆகியவற்றுக்கு உட்பட்டு நெருங்கிய திராவிட கலாச்சார கூட்டுறவு நிலவப் பாடுபடுவது; அரசியல் நிர்ணயச் சட்டத்தில் முழு நம்பிக்கையும், பற்றுறுதியும் கொண்டு சமதர்மம், சமயச் சார்பின்மை, ஜனநாயகம் ஆகிய லட்சியங்களில் முழு ஈடுபாடும், பற்றும் கொண்டு இந்திய நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றைக் கட்டிக் காப்பது;

கோட்பாடு

அறிஞர் அண்ணா அறிவுறுத்திய கடமை – கண்ணியம் - கட்டுப்பாடு அடிப்படையில், அரசியலில் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்து, ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்திடவும்;