பக்கம்:எதிர்பாராத முத்தம், பத்தாம்பதிப்பு.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

இல்லையென்பான் தொல்லை.


பொன்முடி கடையி னின்று
வீட்டுக்குப் போகும் போது,
தன்னெதிர்ப் பண்டாரத்தைப்
பார்த்தனன் "தனியாய் எங்கே
சென்றனிர்" என்று கேட்டான்.
பண்டாரம் செப்பு கின்றான்:
"உன் தந்தை யாரும், நானும்
ஒன்றுமே பேசவில்லை
அவளுக்கும் உனக்கு முள்ள
அந்தரங் கத்தை யேனும்,
அவன் உள்ளை மரத்தில் கட்டி
அடித்ததை யேனும், காதற்
கவலையால் கடையை நீ தான்
கவனியா மையை யேனும்,
அவர் கேள்விப் படவே இல்லை
அதற் கவர் அழவு மில்லை.

40