பக்கம்:எது வியாபாரம், எவர் வியாபாரி.pdf/10

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



எது வியாபாரம்? எவர் வியாபாரி?

வணிகம் - வணிகன் என்பன நல்ல தமிழ்ச் சொற்கள். இவை அடியோடு மறைந்து, “வியாபாரம் - வியாபாரி, வர்த்தகம் - வர்த்தகன்” என்பன போன்ற பிறசொற்களே வழக்கத்தில் இருந்து வருகின்றன. அதிலும் சிறு தொழிலை வியாபாரம் என்றும், பெருந்தொழிலை வர்த்தகம் என்றும் கூறி வருகின்றனர்.

எது நிறுவை?

வர்த்தகர்களின் சின்னம் தராசு. நிறுப்பவன் எவனாக இருந்தாலும், நிறுப்பது எதுவாக இருந்தாலும், தராசின் முள் சிறிது முனைக்கும்படி நிறுக்க வேண்டும். முள் முன்னுக்கு வந்தால், நிறுப்பவன் முன்னுக்கு வருவான்; முதலாளி முன்னுக்கு வருவான்; வியாபாரம் முன்னுக்கு வரும்; நாடும் முன்னுக்கு வரும். முள் பின்னுக்குப்போனால் வியாபாரம் பின்னுக்குப் போய் அடியோடு அழிந்து ஒழிந்து விடும். தராசைப் பிடித்து நிறுக்கிற ஒவ்வொருவரும் இதைத் தம் உள்ளத்தில் பதிய வைத்துக் கொள்வது நல்லது. காரணம் தராசின் முள் நடுநிலை வகிப்பதுபோல வர்த்தகர்களின் உள்ளமும் எப்போதும் நடுநிலைமை வகிக்க வேண்டும்.

எது வியாபாரம்?

கிடைக்குமிடத்தில் வாங்கி, கிடைக்காத இடத்தில் விற்பது வியாபாராம். விளையுமிடத்தில் வாங்கி விளையாத இடத்தில் விற்பது வியாபாரம். உற்பத்தி செய்யும் இடத்தில் வாங்கி உற்பத்தி இல்லாத இடத்தில் விற்பதும், கிடைக்கும் காலத்தில் வாங்கி, கிடைக்காத காலத்தில்

எ.எ.—1