பக்கம்:எது வியாபாரம், எவர் வியாபாரி.pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

றிருப்பது ‘குறைந்த விலை’ என்றிருக்கும் என நான் நினைத்தேன். ஆனால் அதைப் படித்தவர் “அதிக விலை” என்று படித்தார். இப்படி ஒரு வியாபாரமா ? என்று என் தலை சுற்ற ஆரம்பித்தது. மற்ற வேலைகளை யெல்லாம் விட்டுவிட்டு அந்தக் கடையில் போய்க் கடையிலுள்ள சரக்குகளைப் பார்க்கத் தொடங்கினேன். அரிசி-பருப்பிலிருந்து, கடுகு, மிளகு, சீரகம் வரை, கருவாடு, மீன், காய் கறிகள், விறகு, வேட்டி, கூடை, முறம் தட்டு முட்டுச் சாமான்கள் உட்பட 160 சாமான்கள் அந்தக் கடையில் விற்பனையாகிக் கொண்டிருந்தன. விறகு என்றால் 14 அடி நீளம்தான் இருக்கும்; காய்ந்தும் இருக்கும். அரிசி என்றால் சன்னமாக இருக்கும். கல் இராது. பருப்பு என்றால் தூசி இராது. எல்லாம் உயர்ந்த சரக்குகள். அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. அதில் உள்ள வேடிக்கை என்னவென்றால் அந்தக் கடையிலுள்ள சாமான்கள் 160க்கும் விற்பனையாளர்கள் 160 பேர். கடையின் வியாபார நேரம் காலை 6.30 மணி முதல் 7.30 மணிவரை தான். விற்பனையாளர்கள் அனைவருமே பகுதி நேர ஊழியர்கள். அரசாங்கத்திலும் ரயில் நிலையங்களிலும் பணி புரிகின்றவர்கள். ஒவ்வொரு பொருளுக்கும் முன்னால் ‘கியூ’ வரிசையில் நின்று பொதுமக்கள் பொருட்களை வாங்கு கின்றார்கள். 60 பேர் நிற்கிறார்கள். 30 பேர்களுக்கு மட்டுமே சரக்குகள் கிடைக்கின்றன.

முட்டை , இறைச்சி வரிசையில் 80 பேர் நிற்கிறார்கள். 55, 60 பேர்களுக்கு மட்டுமே பொருள்கள் கிடைக்கின்றன. மீதம் 20 பேர் ஏமாற்றமுடன் திரும்பிப் போய் விடுகின்றனர். முடிவாகக் கூற வேண்டுமானால் விற்பனைக்காக வந்த அந்த 160 சாமான்களும் அன்றன்றே விற்பனையாகி விடுகின்றன. ஒரு சரக்கும் மிஞ்சுவதில்லை.

கோலாலம்பூரில் நல்ல நெய் இந்தக் கடையில்தான் கிடைக்கும் என அறிந்து நெய் வாங்குவதற்காக காலை 7.00 மணிக்குப் போய் ‘கியூ' வரிசையில் நின்றேன். நான்