பக்கம்:எது வியாபாரம், எவர் வியாபாரி.pdf/49

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

என்றும் அப்பணம் ஏழைகளின் பணம் என்றும் உறுதி செய்யப்படுகிறது.

வியாபாரிகள் வியாபாரத்தைத் தொடங்குகின்ற முதல் நாளிலேயே ‘சாமி வரவு’ என்றும் ‘மகமை’ வரவு என்றும் ரூ. 101/- அல்லது ரூ. 51/- அல்லது ரூ. 11/- வரவு வைத்துத் தான் தமிழகத்தில் தொழிலைத் தொடங்குவது வழக்கமாக இருந்து வருகிறது.

அந்த மகமைக் கணக்கில் பிறரிடம் வாங்குகிற மகமை மட்டும் அல்லாமல் தன்னுடைய இலாபத்திலும் ஒரு பங்கை மகமைக் கணக்கில் வரவு வைத்து, பல அறச் செயல்களுக்கு வழங்கியாக வேண்டும். இம் முறை வர்த்தகனை மட்டும் அல்ல அவன் வர்த்தகத்தையும் உயர்த்தி வைக்கும்.

முதல் தேவை
எறும்பின்——சுறுசுறுப்பும்
எருதின்——உழைப்பும்
நரியின்——சிந்தனையும்
தாயின்——நன்றியும்
கழுதையின்——பொறுமையும்
காகத்தின்——கூட்டுறவும்
சிங்கத்தின்——நடையும்
யானையின்——அறிவும்
புலியின்——வீரமும்
புறாவின்——ஒழுக்கமும்
மானின்——வாழ்வும்

மக்களுக்குப் பொதுவாகத் தேவை. ஆனால் வியாபாரிகளுக்கோ இவை முதல் தேவை!