டாக்டர் சி.வி.கிருஷ்ணன் M.D., Ph.D., M.C.A.I.,
Senior Consultant, Dept. of Psycho Neuro immuno
Endocrinology (PNIE),
PNIE Clinic
16வது தெரு, 4வது பிரதான சாலை,
அண்ணா நகர், சென்னை - 600 040.
தொலைபேசி : 28192889
ஆறுமுகனின் பெயரைக் கொண்ட இவருடைய புனை முகங்கள்: வயலுார் சண்முகம், மாவெண்கோ , செம்மல், நவயுகக் கவிராயர். இவை தாண்டி, இவருடைய கவிதை உலகின் பிரதி பிம்பங்கள் காண்பதெல்லாம் வேறுவேறு - நூறு நூறு முகங்கள்.
இளமையில் வளமையில் ஓடியாடிவிட்டு நடுவயதைத் தொடும்போது, வறுமையில் வாடியபோதும் கவிதையின் வளமை மட்டும் இவரை விட்டு எப்போதும் விலகவில்லை.
தனக்கும் சமூகத்துக்கும், தனக்கும் உறவுகளுக்கும், தனக்கும் நட்புக்கும், தனக்கும்
இயற்கைக்கும் தனக்கும் இறைவனுக்கும் - சோகமாகவும் சுகமாகவும் கவிதைச் சிற்பங்களாய் செதுக்கி வைத்திருக்கும் படைப்புத் தொகுப்பு தான் இந்த நுால்.