பக்கம்:எதைத் தேடுகிறாய்.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒவ்வொரு உணர்ச்சியும் நெகிழ்ச்சியாக செரித்து மனதின் சுகமான ஏப்பமாக வெளி வருகின்றன செரிந்த கவிதைகளாய்.

மொழி கடவுள் தன்மையாகவும் அந்த சத்தியத்தை உபாசிப்பவர்கள் வார்த்தைகளுக்குக் கூட கடவுளின் மெய்ம்மையை கலக்க விட்டு, அவர்கள் சொல்வதெல்லாம் நிச்சயமான நிஜங்களா கின்றன என்கிறார் தனது கந்தர்வமான கவிமொழியில்.

மட்டுமே வந்து கடவுளுடன் உரையாடிய இவர்,இன்று நேரடியாகவே அங்கு உரையாட சென்றுவிட்டாலும், தாம் வாழ்ந்த நாட்களில் கடவுளிடம் வைத்த கோரிக்கைகள் ஏக்கத்தின் வெளிப்பாடுகள். வாழ்க்கைப் பற்றிய வாதபிரதிவாதங்கள்.

விளையாட்டாகவும் ஆச்சரியமாகவும் அற்புதமாகவும் எழுத்து தீபமாய் இப்போதும் ஜொலிக்கின்றன, காலங்களைக் கடந்து.

பழம் வைக்க கடவுள் மறந்ததையும் இரும்புச் சதைகளை இதயமாக்கியோர் வாழ்வில் கடவுள் வளங்களைக் குவித்ததையும் நாசுக்காக சுட்டிக்காட்டி தனக்குள் நகைத்துக் கொள்கிறார்.

உயரத்தை மனதின் உயரமாகக் காட்டி, உண்ணும் உப்பும் உடுக்க உடையும் தந்த கடவுள் நம்மைவிட்டு எங்கேயும் போகவில்லை, நமக்குள்ளேயே தான் உறைந்திருக்கிறார் என்பதை வார்த்தை வார்த்தை யாக வடித்து இறைத் தன்மையின் சிறப்பை நமக்கு இயல்பாக உணர்த்துகிறார்.