கடவுளுக்கும் தனக்குமான அந்தரங்கமான நெருக்கத்தை சித்தரிக்கையில் அவர் சொற்களில் காணும் சோகம் நமது இமைகளையும் தழுவிக் கொள்வதைத் தவிர்க்க முடியவில்லை...
'கவ்வும் சோகம் செத்தொழிய
கண்ணீர் ஊற்றை மூடிவிட
அவ்வப்போது கோப்பைக்குள்
ஆத்மாவை மறையச் செய்கிறேன்!'
என்ற இந்த வரிகளில் தனது இறைத்தன்மை இழையோடும் ஆத்மாவையே மதுவாக்கி கோப்பைக்குள் நிரப்புகிறார்.இந்த மது தரும் போதை நமது நெஞ்சங்களை நிறைக்கிறது.
ஒரு படைப்பாளியின் படைப்பு வெற்றி என்பது இதைத் தவிர வேறென்ன? தமிழ்ப் பாட்டின் சுவையும் கவிதை நாட்டியத்தின் ஆச்சரியமான அபிநயங்களும் உள்ளத்தைத் தீண்டும் உவமைகளும் ஒவ்வொரு கவிதைக்குள்ளும் கம்பீர அரியாசனம் போட்டு அமர்ந்துள்ளன என்பது கண்கூடு.
இயற்கையில் உயரற்றதாக கருதப்படும் பொருட்களுக்குக் கூட உணர்ச்சிகளை ஊட்டி, அவைகளின் மொழிகளைக் கவிதையாக்கி படைப்புத் தொழிலின் உச்சமான இறைத்தன்மையை எட்டுகின்றன இவருடைய கவிதை எழுத்துக்கள்.
மனிதனுக்குள் கடவுள் தனிமை எப்போதேனும் வெளிப்படும் என்ற உண்மை இரண்டு சகாப்தங்களுக்கு முன்பே இவர் எழுதிவைத்துச் சென்றுள்ள இந்த சிற்பக்