பக்கம்:எதைத் தேடுகிறாய்.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிதைகளில் மின்னல் வெட்டுகின்றன. துாய்மையான உள்ளமும் விழித்திருக்கும் அகக் கண்களும் கொண்டோருக்கு மட்டுமே இதுபோன்ற உயிர்த் தன்மை நிறைந்த வார்த்தைகள் உதிரும் என்பது எனது பணிவான கருத்து.

செம்மொழிச் செம்மலாக தமிழின் கவியாசனத்தில் பிரம்மாண்டமாக அமர்ந்திருக்கும் வ.கோ. சண்முகம் நிச்சயமாக கவியரசர்தான். இந்தத் தொகுப்பை வாசித்து முடிக்கும் எவரும் எனது கருத்துக்கு மறுப்பு சொல்ல இயலாது என்பது எனது தாழ்மையான எண்ணம்.

நான் வணங்கும் கடவுளர் களோடு இவரையும் இணைத்து வணங்குகிறேன் ஆத்மபூர்வமாக...

நெகிழ்வுடன்

அன்பன்

சி.வி.கிருஷ்ணன்