பக்கம்:எதைத் தேடுகிறாய்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1


சத்தியம்

எப்போதும் சத்தி யத்தை
இயம்பியே பழகி விட்டால்
தப்பேதும் நேர்ந்தி டாது!
தவறியே பேசும் போதும்
தப்பாது அந்தச் சொல்லும்
சத்தியமாய் ஆகி நிற்கும்!
ஒப்பாக மனமும் வாக்கும்
ஒன்றுதல்தான் மெய்ய தாகும்

உள்ளந்தான் சத்தி யத்தின்
உறைவிடம் ஆகி விட்டால்
எள்ளத்தனை சொல்லும் கூட
ஈடற்ற சக்தி கொள்ளும்!
உள்ளத்தால் சத்தி யத்தை
உபாசிப்போர் சொல்ல னைத்தும்
மெல்லவேனும் பலித்தே தீரும்!

வெறுஞ்சொல்லாய்ப் போய்வி டாது!