இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
3 ..............................................எதைத் தேடுகிறாய்..?
மஹா சாம்ராஜ்யம்
வைர மரகத மாணிக்க மிழைத்த
வனப்பெலாம் பொழியும் மகுடம் மின்னும்,
எழில்மிகு தங்கச் சுவர்கள் குழும்
அரண்மனை சுமக்கும் மணித்த விசினும்
இனிய பெரிய_
அரசுடைக் கொற்ற
புனிதப் பொன்னா டொன்றுளதே,
அறிவையோ மகனே?
அதுவே, அதுவே
தூய நெஞ்சச் சுடராய்ப் பொங்கும்
அருளின் பணியாம் அன்பின் தொண்டாம்!
அதன்பெயர் புண்ணியம்!
ஆமடா கண்ணே.!